ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.!
மத்துகம – அகலவத்தை, தெல்கஸ் சந்தி பகுதியில், வீதியோரத்தில் உள்ள வடிகாலில் நேற்று சனிக்கிழமை (07) ஆணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மிரிஸ்வத்தை, இத்தேபன பகுதியைச் சேர்ந்த 41 வயதுடையவரே உயிரிழந்தவர் ஆவார்.
உயிரிழந்தமைக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக நாகொடை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தெடர்பான மேலதிக விசாரணைகளை மத்துகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.