பெருவெள்ளம் தொடர்பில் பிரித்தானியாவுக்கு எச்சரிக்கை.!
பிரித்தானியாவில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வரும் நிலையில், இங்கிலாந்துக்காக 80க்கும் மேற்பட்ட பெருவெள்ள எச்சரிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.தென்மேற்கு மற்றும் மத்திய இங்கிலாந்து பகுதிகளில் பெருவெள்ளம் அதிகமாக ஏற்படும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே பெருவெள்ளம் தொடர்பாக 253 எச்சரிக்கைகள் அமுலில் உள்ள நிலையில், வடக்கு யார்க்ஷயர் முதல் கொர்ன்வால் வரை மற்றும் வேல்ஸ் எல்லைகள் முதல் நோர்ஃபோக் வரை பெருவெள்ளம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், வேல்ஸ் நாட்டுக்காக தனியாக 11 பெருவெள்ள எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளன.