உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

தேசிய வாசிப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நூலக வாகனங்களை வழங்கும் ஆரம்ப நிகழ்வு.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
26 பார்வைகள்

‘க்ளீன் ஸ்ரீலங்கா’ தேசிய வேலைத்திட்டத்திற்கு இணைவாக முன்னெடுக்கப்படும் ‘அருணு தொர’ தேசிய வாசிப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், மேல் மாகாணத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 உள்ளூராட்சி மன்றங்களுக்கு நடமாடும் நூலக வாகனங்களை வழங்கும் ஆரம்ப நிகழ்வு நேற்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ், நவீன வசதிகளுடன் கூடிய 10 நடமாடும் நூலக வாகனங்கள் மற்றும் 9,300 புத்தகங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

இதற்காக ‘க்ளீன் ஸ்ரீலங்கா’ செயலகம் நிதி ஒதுக்கீடுகளை வழங்கியுள்ளதுடன், மேல் மாகாண சபையின் உள்ளூராட்சி திணைக்களம் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றது.

இந்த நூலக வாகனங்கள் கெஸ்பேவ, சீதாவகாபுர ஆகிய நகர சபைகளுக்கும் ஹோமாகம, தொம்பே, அத்தனகல்ல, மினுவாங்கொடை, வத்தளை, புலத்சிங்கள, வலல்லாவிட்ட மற்றும் பாலிந்தநுவர ஆகிய பிரதேச சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இந்த வேலைத்திட்டத்தின் மூலம் பிரதேச மட்டத்திலான வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பதற்கும், நூலக வசதிகளை பொதுமக்களின் இருப்பிடங்களுக்கே கொண்டு செல்வதற்கும் எதிர்பார்க்கப்படுவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

41 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

80 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

72 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

32 0 0