உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

தமிழ் மக்களின் பாதுகாப்புக்கு இராணுவ முகாம்கள் அவசியம்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
20 பார்வைகள்

“வடக்கு, கிழக்கில் இராணுவ முகாம்கள், பொலிஸ் நிலையங்கள் இருப்பதால்தான் தமிழ் மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.” – இவ்வாறு மஹிந்த அணி தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சாந்த பண்டார ஊடகங்களிடம் கூறியதாவது,
“சுதந்திரம் என்பது அபிமானம். அதன் கம்பீரத்தன்மையைக் குறைமதிப்புக்கு உட்படுத்தக்கூடாது. உலகில் எந்தவொரு நாடும் அவ்வாறு செய்யாது.

ஆனால், இலங்கையில் தேசிய மக்கள் சக்தி ஆட்சியின் கீழ் சுதந்திரத்தின் கம்பீரத்தன்மை இல்லாமல் போயுள்ளது. செலவுகளைக் கட்டுப்படுத்துகின்றோம் என்ற போர்வையில் அபிமானம் இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளது.

படையினரின் வீரதீரச் செயல்கள் பற்றி பேசப்படவில்லை. நாட்டில் இன்று அவசரகாலச் சட்டம் அமுலில் உள்ளது. இந்நிலையில் இலங்கையின் 78 ஆவது சுதந்திர தினத்தன்று வடக்கு, கிழக்கில் கறுப்புக்கொடி ஏற்றப்படுகின்றது. இதற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?

வடக்கு, கிழக்கில் இராணுவ முகாம்கள், பொலிஸ் நிலையங்கள் இருப்பதால்தான் தமிழ் மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு சில இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டுள்ளன. எஞ்சியவற்றையும் அகற்றினால் பொலிஸையும் அகற்றுமாறு கோருவார்கள்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

41 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

80 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

72 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

32 0 0