உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

கிவுல் ஓயா திட்டம் – சுற்றுச்சூழலுக்கும் தமிழ் மக்களுக்கும் பெரிய அச்சுறுத்தல் – ரிஷார்ட் சுட்டிக்காட்டு.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
25 பார்வைகள்

பேரினவாத இனம் வாழவேண்டும் என்பதற்காகவே காடுகளை அழித்து உருவாக்கப்படும் கிவுல் ஓயா திட்டம் பிழையானது என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரிஷார்ட் பதியுதீன் தெரிவித்தார்.வவுனியா சாளம்பைக்குளத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட மதராசாவினைஆரம்பித்து வைத்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்

‘பிரஜா சக்தி’ என்ற ஒன்றை உருவாக்குகின்ற பொழுது நாங்கள் சந்தோஷமடைந்தோம். அதன் ஊடாக குறித்த பிரதேசங்கள் முன்னேறும் என்ற ஒரு நம்பிக்கை இருந்தது.ஆனால், குறித்த நிர்வாகத்தைச் மேற்கொள்கின்ற போது குறித்த கிராமத்தில் இயங்குகின்ற கிராம அபிவிருத்தி சங்கம் உட்பட பல்வேறுபட்ட அமைப்புக்களுடனோ கல்விமான்கள் உடனோ, கலந்துரையாடாடப்படுவதில்லை.

மாறாக கடந்த தேர்தலிலே தற்போதைய அரசாங்கத்திற்கு போஸ்டர் போன்ற வேலைகளைச் செய்தவர்களை பிரஜா சக்திக்கு தலைவர்களாக நியமித்து அவர்களுக்குக் கீழே அவர்கள் விரும்புகின்ற பலரை உறுப்பினர்களாக நியமித்துச் செயல்படுகின்ற ஓர் அமைப்பாக அது மாறி இருக்கிறது.தேசிய மக்கள் சக்தியினை சாராத உள்ளூராட்சி உறுப்பினர்கள் குறித்த பிரஜாசக்தியில் தலைவர்களாகவோ அல்லது உறுப்பினர்களாகவோ சேர்க்கப்படாமல் செயல்படுவது ஒரு சிறுபிள்ளைத்தனமான செயல்பாடு.

இந்த நாட்டிலே பேரினவாத சக்திகளுடைய கடந்த காலச் செயல்பாட்டினால் தனிநாடு கேட்டு ஒரு சமூகம் போராடிய வரலாறு இருக்கின்ற பொழுது, இந்த நாட்டிலே இன மத பேதங்களுக்கு அப்பால் அநுர குமார திசாநாயக்க என்ற ஒருவரை ஜனாதிபதியாக்குவதற்காக யாழ்ப்பாணம் தொடக்கம் ஹம்பாந்தோட்டை வரை வாழ்கின்ற மக்கள் இன மத பேதங்களுக்கு அப்பால் அவருக்கு ஆதரவு தெரிவித்ததற்குரிய நன்றிக்கடனாக, இன்று அந்தந்த கிராம ஊரவர்கள் தாங்கள் விரும்பித் தெரிவு செய்த உள்ளூராட்சி உறுப்பினர்களைப் புறம் ஒதுக்கிவிட்டு யாரோ ஒருவர் வந்து அல்லது அந்தக் கட்சிக்கு போஸ்டர் ஒட்டினாரோ அல்லது அந்தக் கட்சிக்கு வால் பிடித்தாரோ அவரை ஊர் தலைவராக நியமிக்கின்ற ஒரு செயல்பாடு இந்த நாட்டிலே ஒரு சாபக்கேடாக நாங்கள் பார்க்கிறோம்.

75 வருட சாபக்கேடு என்று பேசியவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு எந்தவொரு அரசாங்கமும் செய்யாத ஒரு மோசமான செயலை செய்து கொண்டிருப்பது அவர்களுடைய எதிர்கால அரசியலுக்கு ஒரு பேர் ஆபத்தாக அமையும்.

கிவுல் ஓயா திட்டம் என்பது தமிழ் மக்கள் வாழ்ந்த பிரதேசங்களிலே பாரம்பரியமான ஒரு பெரிய காட்டை அழித்து உருவாக்கப்படவுள்ளது. குறிப்பாக சாளம்பைக்குளம்,பெரியமடு, அல்லது மடு ஆகியவை 2009க்கு பின்னரே காடுகளாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டது. ஆனால்இ குறித்த காடானது பல தசாப்தங்களுக்கு முன்னர் காடாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டதாகும்.இந்நிலையில் குறித்த திட்டத்திற்காக பழமையான 5000 ஏக்கர் உள்ள காட்டை அழிக்கவுள்ளனர்.

பேரினவாத இனம் வாழ வேண்டும் என்பதற்காகவும், வேறு மாவட்டத்தில் வாழ்கின்ற பேரினவாத மக்களை இங்கே கொண்டு வந்து குடியேற்றம் செய்வதானது, மிகப்பெரிய சதியாகும். குறித்த சதிக்காகவே 5000 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள காடுகளை அழித்து செய்கின்ற கிவுல் ஓயா திட்டமானது ஒரு பிழையான திட்டமாகும்.

சுற்றாடலை பாதுகாக்க வேண்டும் என சிந்திப்பவர்கள் இதற்கு எதிராகவே வழக்கு போட வேண்டுமே தவிர 100 வருடம் பழமையான மன்னார் புத்தளம் வீதியை மூடுவதற்கு வழக்கு போட்டு வெற்றியடைந்துஇ அதன் ஊடாக அதனை நியாயப்படுத்தி பேசுவது என்பது நியாயமானதன்று.

கிவுல் ஓயா திட்டம்தான் உண்மையான சுற்றுச்சூழலிற்கு பாதிப்பாகும், தமிழ் பேசும் மக்கள் அதிகம் வாழ்கின்ற வவுனியா மாவட்டத்திலே அல்லது வன்னி மாவட்டத்திலே இவ்வாறு செய்வதானது மிகவும் கண்டிக்கத்தக்கது.மேலும் இதற்கு எதிரான நடவடிக்கைகளிற்கு தமிழ் தரப்பு எங்களை அழைக்கவில்லை என்றாலும் எதிர்காலத்திலே எங்கள் கட்சியும் பூரண ஆதரவை கட்டாயம் வழங்கும் என தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

41 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

80 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

72 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

32 0 0