உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

திருகோணமலை சனீஸ்வரன் ஆலய உரிமை விவகாரம்: பெண் ஒருவர் கூறிய கருத்தால் பரபரப்பு.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
26 பார்வைகள்

திருகோணமலை சனீஸ்வரன் ஆலயத்திற்கு இன்று (07) காலை வருகை தந்திருந்த பெண் ஒருவர், குறித்த ஆலயம் தங்களுடையது எனக் கூறியமை அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மரத்தடி பகுதியைச் சேர்ந்த சிட்டி வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த பெண் ஒருவரே, இரு பௌத்த பிக்குகளுடன் ஆலயத்திற்கு வருகை தந்து இவ்வாறு தெரிவித்ததாக அறியப்படுகிறது.


அவர், சனீஸ்வரன் ஆலயம் தங்களது பரம்பரை வழிபாட்டு தலமாகும் என்றும், தாம் தலைமுறைகள் தோறும் இவ்விடத்தில் வழிபட்டு வருவதாகவும் கூறியுள்ளார். இதனையடுத்து, ஆலய நிர்வாகத்தின் எதிர்ப்பையும் மீறி ஆலயத்தின் உட்பகுதியில் சிட்டி விற்பனையில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.மேலும், அவருடன் வந்திருந்த இரு பிக்குகள் அங்கு சிட்டி எரித்து வழிபாடு மேற்கொண்டதுடன், தாம் கொண்டு வந்திருந்த கதிரைகளில் அமர்ந்து சிறிது நேரம் தங்கியிருந்து பின்னர் எதுவும் கருத்து வெளியிடாது சென்றதாகக் கூறப்படுகிறது.


ஆலய வளாகத்திற்குள் தனியாரால் சிட்டி விற்பனை செய்வதற்கு முன்பே ஆலய நிர்வாகம் தடை விதித்திருந்ததாகவும், அதனை மீறியே குறித்த பெண் விற்பனைச் செயற்பாட்டில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இச்சம்பவம் தொடர்பாக ஆலய நிர்வாகமும் பிரதேச மக்களும் தங்களது எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாகவும், மேலதிக நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாகவும் அறியப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

41 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

80 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

72 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

32 0 0