மன்னார் பிரதான பால கடற்கரையோர பகுதியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை முன்னிட்டு இடம் பெற்ற கண்டல் தாவர நடுகை.!
சுற்றுச்சூழல் பாதுகாப்பை முன்னிட்டு, “கடற்கரை யோரங்களை பாதுகாப்போம்” என்ற தொனிப்பொருளில் மன்னார் ரொட்ராக்ட் இளைஞர் கழகத்தினர் இன்று (07) மன்னார் பிரதான பால பகுதியில் கரையோரப் பகுதிகளில் கண்டல் தாவரங்கள் நடுகை நிகழ்ச்சியை நடத்தினர்.
இதில் ரொட்ராக்ட் கழகத்தின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்டு மர நடுவை ஆரம்பித்தனர்.
நிகழ்ச்சி மூலம் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட கண்டல் தாவரங்கள் குறித்த பகுதியில் நாட்டி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடத்தக்கது.


