உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

இலங்கையில் மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கத்தின் விலை.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
25 பார்வைகள்

கடந்த நாட்களில், சர்வதேச மற்றும் உள்நாட்டு சந்தைகளில் ஏற்பட்ட பெரிய சரிவுக்கு பின்னர் தங்கத்தின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன.சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் காரணமாக, இலங்கையில் தங்கத்தின் விலை மீண்டும் உச்சம்தொட்டுள்ளது.

அதன்படி, இன்று (07) தங்கத்தின் விலை 2,000 ரூபாவினால் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.இதன்படி, ஒரு பவுண் 24 கரட் தங்கம் 392,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 362,600 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 49,000 ரூபாயாகவும்,22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45,325 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது. புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மைகள் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளி பாதுகாப்பான புகலிட சொத்துக்களாக தொடர்ந்து செயல்படும் என்றும் நிபுணர்கள் கருதுகின்றனர்.

சமீபத்திய கருத்துக் கணிப்பின் படி, 2025 ஆம் ஆண்டு சாதனை படைத்த நிலையில், 2026 ஆம் ஆண்டு தங்கம் நல்ல நிலையில் இருக்கும் என்று கணித்துள்ளது.உலகளாவிய மத்திய வங்கிகளின் கொள்முதல் தங்க விலை உயர்வுக்கு தொடர்ந்து பங்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

41 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

80 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

72 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

32 0 0