உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

சுமந்திரன் – சிறீநேசன் இடையே கருத்து மோதல்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
17 பார்வைகள்

நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முக்கிய கூட்டம் நடைபெற்று, கட்சியின் 8 எம்.பிகளுள் சிறீதரனைத் தவிர மற்ற ஏழு பேரும் பங்கேற்றனர்.கூட்டம் கட்சியின் பொதுச்செயலாளர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனுடன் நடைபெற்ற சந்திப்பின் தொடர்ச்சியாக நடைபெற்றது. நாடாளுமன்றக் குழுவின் செயலாளர் எஸ். குகதாசன் இந்த கூட்டத்துக்கு ஒழுங்கு செய்திருந்தார்.


கட்சிக்குள் நிலவும் குழப்பங்கள், இடையிலான இழுபறி நிலைகள் ஆகியவற்றை சரிசெய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கு முன்பும், நாடாளுமன்றக் குழு சிறீதரனுடன் இதேபோன்ற சந்திப்பை சில தினங்களுக்கு முன்னர் நடத்தி இருந்தது; அந்த சந்திப்பில் சாணக்கியன் எம்.பி. கலந்துகொள்ளவில்லை.

நாடாளுமன்றக் கூட்டத்தில் கட்சியின் வழக்கு, சிக்கல்கள், அரசமைப்புக் கவுன்சிலில் சிறீதரனின் செயற்பாடு, சிறீதரனை நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியில் இருந்து நீக்குவதற்கு அரசியல் குழு எடுத்த தீர்மானம் ஆகிய விவரங்கள் சுமந்திரன் விளக்கமாக உறுப்பினர்களுக்கு கூறியுள்ளார்.


கூட்டத்தின் போது இடையிடையே சிறீநேசனுடன் சுமந்திரனுக்கு கருத்து மோதல் ஏற்பட்டது என தெரிவிக்கப்படுகிறது. எனினும், கட்சியின் நிலைமை மற்றும் சிறீதரனின் செயற்பாடுகள் குறித்து மிகத் தெளிவாகவும் சுமந்திரன் விளக்கம் அளித்ததாக கூட்டத்தில் பங்கேற்ற எம்.பி. ஒருவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

41 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

80 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

72 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

32 0 0