வயலில் வேலை செய்த குடும்பப் பெண் காட்டு யானை தாக்கி பரிதாப மரணம்!
காட்டு யானையின் தாக்குதலால் குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்த துயரச் சம்பவம் பொலன்னறுவை மாவட்டத்தில் பதிவாகியுள்ளது.
பொலன்னறுவை மாவட்டத்தின் மெதிரிகிரிய பிரதேசத்தில் நேற்று மாலை இந்த அனர்த்தம் இடம்பெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வயலில் கூலி வேலை செய்து கொண்டிருந்த வேளையில் திடீரென புகுந்த காட்டு யானை தாக்கியதில் குறித்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.உயிரிழந்தவர் மூன்று பிள்ளைகளின் தாயாரான 45 வயதுடைய குடும்பப் பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.