உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

மாணவியை மிருகத்தனமாக தாக்கிய ஆசிரியர்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
16 பார்வைகள்

நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட நானுஓயா பகுதியில் பாடசாலை ஒன்றில், தரம் 08 இல் கல்வி கற்கும் மாணவி ஒருவரை ஆசிரியர் ஒருவர் மிருகத்தனமாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட மாணவி நேற்று வியாழக்கிழமை (05) நானுஓயா ஆரம்ப வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.எனினும், மாணவிக்கு ஏற்பட்ட காயங்களின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, மேலதிக சிகிச்சைக்காக இன்று நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பெற்றோர் தெரிவித்தனர்.

மாணவிக்கு அடிகாயங்கள், உட்காயங்கள் ஏற்பட்டதுடன், கடும் வலியினால் தானாக சிறுநீர் கசிவு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக மாணவி இன்று பாடசாலைக்கு செல்லவில்லை என்றும், தொடர்ந்து தலைவலி, தலைச்சுற்று, குமட்டல் உள்ளிட்ட உடல்நலக் குறைபாடுகள் அதிகரித்து வருவதாகவும் பெற்றோர் தெரிவித்தனர்.

குறித்த ஆசிரியர் வழக்கமாக பாடசாலையில் மாணவ, மாணவிகளுக்கு தொல்லை கொடுத்து, தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கி வருவதாக பாதிக்கப்பட்ட மாணவி கூறியுள்ளார்.சம்பவ தினத்தன்று, பெற்றோரை குறிப்பிட்டு தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், கன்னம் மற்றும் செவி பகுதிகளில் கடுமையாக தாக்கியதாகவும், பின்னர் தலையை பிடித்து மேசையில் மோதச் செய்து, முதுகுப் பகுதியில் முழங்கையால் தாக்கியதாகவும் மாணவி தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக வலி தாங்க முடியாமல் சிறுநீர் கசிவு ஏற்பட்டதாகவும், பாடசாலை முடியும் வரை அதே சீருடை மற்றும் பாதணியுடன் வீடு திரும்பியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.பாடசாலை முடிந்து வீடு திரும்பிய மாணவியிடம் பெற்றோர் விசாரித்த போது, சம்பவ விவரங்களை தெரிவித்ததுடன், ஏற்பட்ட காயங்களையும் காட்டியுள்ளார்.

இதனையடுத்து, மாணவியை உடனடியாக வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற பெற்றோர், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் பதிவு செய்துள்ளனர்.பெற்றோரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில், குறித்த ஆசிரியர் நானுஓயா பொலிஸாரினால் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், குறித்த ஆசிரியர் இதற்கு முன்னரும் பல மாணவர்களை பாடசாலையில் காட்டுமிராண்டித்தனமாக தாக்கியுள்ளதாகவும், ஏற்கனவே ஒரு மாணவனை தும்புத்தடியால் தாக்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாகவும், பாடசாலை பெற்றோர் வட்டாரங்கள் மற்றும் பொலிஸ் விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளது.இந்த சம்பவம் தொடர்பில் நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

40 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

80 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

72 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

32 0 0