க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மேலதிக வகுப்புகளுக்கு தடை!
எதிர்வரும் 11 ஆம் திகதி நள்ளிரவு முதல் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முடியும் வரை மேலதிக வகுப்புகளுக்கு தடைசெய்யப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் 3,545 பரீட்சை நிலையங்களில் எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, 11 ஆம் திகதி முதல் பரீட்சை முடியும் வரை கல்விப் பொதுத் தராதர வகுப்புகள், கருத்தரங்குகள், பயிற்சிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைத்து சேவைகளும் தடைசெய்யப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.