உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

கிழக்கு மாகாண ஆளுநருக்கும் புதிய கடற்படை தளபதிக்கும் இடையில் விசேட சந்திப்பு.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
28 பார்வைகள்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகரவுக்கும், கிழக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதி ரியர் அட்மிரல் கோசல வர்ணகுலசூரியவுக்கும் இடையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.குறித்த கலந்துரையாடலானது இன்று(6.2.2026) ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.

இதன்போது, பாதுகாப்பு மற்றும் கடலோரப் பாதுகாப்பு, கிழக்கு மாகாணத்தின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் மற்றும் கடலோரப் பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்துவது குறித்து இருவரும் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகள் மற்றும் அவசர கால அனர்த்தங்களின் போது கடற்படையினரால் வழங்கப்படக்கூடிய ஒத்துழைப்புகள் மற்றும் சிவில் சமூகத்திற்கும் கடற்படைக்கும் இடையிலான உறவை மேம்படுத்துவது குறித்து ஆராயப்பட்டது.

கடலோரப் பகுதிகளில் இடம்பெறும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களைத் தடுப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆளுநர் இதன்போது சுட்டிக்காட்டினார்.கிழக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாகப் பொறுப்பேற்றுள்ள ரியர் அட்மிரல் கோசல வர்ணகுலசூரியவுக்கு ஆளுநர் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், மாகாணத்தின் அமைதி மற்றும் பாதுகாப்பைப் பேணுவதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாகவும் குறிப்பிட்டார்.இந்தச் சந்திப்பின் முடிவில், இரு தரப்பினருக்கும் இடையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

40 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

80 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

72 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

32 0 0