உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

25 மாவட்டங்களிலும் உள்ள தொழில்நுட்பக் கல்லூரிகளை நவீனமயமாக்க நடவடிக்கை.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
23 பார்வைகள்

இலங்கையின் தொழிற்கல்வித் துறையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தி, 25 மாவட்டங்களிலும் அமைந்துள்ள 25 தொழில்நுட்பக் கல்லூரிகளையும் நவீன உலகிற்கு ஏற்ற வகையில் அபிவிருத்தி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.இன்று (06) பாராளுமன்ற வளாகத்தில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நலின் ஹேவகே ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் இத்தகவல்கள் வெளியிடப்பட்டன.இங்கு கருத்துத் தெரிவித்த பிரதமர்,

“வெறுமனே தொழில்நுட்ப அறிவை வழங்குவதோடு மாத்திரம் நின்றுவிடாது, இளைஞர் சமூகத்தின் மனநல ஆரோக்கியம் மற்றும் நலன்புரி விடயங்கள் குறித்தும் அதிக கவனம் செலுத்தி இந்த அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க வேண்டும்.இதன்கீழ், நவீன வசதிகளுடனான விடுதிகள், சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் சுகாதார வசதிகளை நிறுவுதல் பொழுதுபோக்கு மற்றும் கலைநயமிக்க அனுபவங்களைப் பெறக்கூடிய வகையிலும் மன அமைதி கிடைக்கக்கூடிய வகையிலும் உட்புற மற்றும் வெளிப்புற வளாகங்களை அழகுபடுத்துதல் ஏனைய கல்வி நிறுவனங்களிலிருந்து வேறுபடுத்தி அறியக்கூடிய வகையில் ஒவ்வொரு தொழில்நுட்பக் கல்லூரிக்கும் தனித்துவமான அடையாளத்தை உருவாக்குதல் ஆகிய விடயங்களில் விசேட கவனம் செலுத்துவது அவசியமாகும்” எனக் குறிப்பிட்டார்.இதன்போது கருத்துத் தெரிவித்த தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நலின் ஹேவகே,

நாட்டின் அபிவிருத்திக்குத் தேவையான மனித வளத்தை மேம்படுத்துவதற்காக 23 தொழில்நுட்பக் கல்லூரிகளின் அபிவிருத்திப் பணிகளை மிக விரைவில் ஆரம்பிக்க முடியும் எனக் குறிப்பிட்டார். இந்த நிர்மாண மற்றும் நவீனமயமாக்கல் பணிகளுக்காக முப்படைகளின் மனித வளங்களையும், ஒத்துழைப்பையும் பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிகழ்வில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொன்தா, கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ உள்ளிட்ட முப்படை அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

40 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

80 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

72 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

32 0 0