உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

பட்டதாரிகளுக்கு மகிழ்ச்சிகர செய்தி.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
19 பார்வைகள்

நாட்டிலுள்ள தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை இணைத்துக்கொள்வதற்காக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு இரண்டு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்களை வெளியிட்டுள்ளது.

இதன் கீழ் அரச சேவையில் உள்ள பட்டதாரிகள் மற்றும் அரச சேவையில் இல்லாத பட்டதாரிகள் என இரு தரப்பினரும் விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.10.02.2023 அன்றைய திகதியில் அரச சேவையில் நியமனம் பெற்று, தற்போது சேவையில் உள்ள உத்தியோகத்தர்களாக இருத்தல் வேண்டும்.10.02.2023 அன்று 45 வயதிற்கு மிகாதவராகவும், அன்றைய திகதியில் பட்டப்படிப்பு தகுதிகளை பூர்த்தி செய்தவராகவும் இருத்தல் வேண்டும்.

இந்த ஆட்சேர்ப்பு தொடர்பாக ஏதேனும் வினவல்கள் இருப்பின், வேலை நாட்களில் முற்பகல் 9 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை பின்வரும் தொலைபேசி இலக்கங்கள் ஊடாகத் தொடர்புகொண்டு தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம் என கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.ஜே.எஸ்.எஸ். ஏதிரிசூரிய தெரிவித்துள்ளார்.இதற்கமைய, தமிழ் மொழி மூலமான தகவல்களை அறிய 0112-785634 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைக்குமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

40 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

80 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

72 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

32 0 0