உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

மாகாண சபை தேர்தலை அரசாங்கம் திட்டமிட்டு தாமதப்படுத்தி வருவதாக சாணக்கியன் குற்றச்சாட்டு.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
20 பார்வைகள்

மாகாண சபை தேர்தலை அரசாங்கம் திட்டமிட்டு தாமதப்படுத்தி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குற்றம்சாட்டியுள்ளார்.இன்றைய நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பில் ஒரு தீர்வைக் காண்பதற்காக, நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றைத் நியமிப்பதற்கான பிரேரணை கடந்த 2026 ஜனவரி 6ஆம் திகதி இந்த நாடளுமன்றில் நிறைவேற்றப்பட்டது.

ஜனவரி 6ஆம் திகதி முதல் எதிர்க்கட்சியானது தனது பிரதிநிதிகளாக ரஞ்சித் மத்துமபண்டார, நான் (மனுதாரர்), நிசாம் காரியப்பர் மற்றும் மனோ கணேசன் ஆகிய நான்கு பெயர்களையும் அனுப்பி வைத்துள்ளது. ஆனால், தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒரு மாதம் கடந்தும் அரசாங்கம் இதுவரை தமது பெயர்களை அனுப்பவில்லை என சாணக்கியன் சுட்டிக்காட்டினார்.இதேவேளை, இது மாகாண சபைத் தேர்தல்களைத் தாமதப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் தெளிவான நகர்வாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் வன்முறைகள் மீண்டும் ஏற்படாது என்பதை உறுதிப்படுத்த வேண்டுமாயின், குறைந்தபட்சம் ஏதாவதொரு அதிகாரப் பகிர்வு மாதிரியாவது இருக்க வேண்டும் எனவும் ஆனால் அறிவிப்பு வெளியாகி ஒரு மாதமாகியும் அரசாங்கம் சார்பில் இன்னும் பெயர்களை வழங்கவில்லை எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

இந்நிலையில், இது மாகாண சபைத் தேர்தல்களைத் தள்ளிப்போடும் ஒரு திட்டமிட்ட செயலாகும் எனவும் பிரதமர் தயவுசெய்து இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் எதிர்க்கட்சி தனது பெயர்களை ஏற்கனவே அனுப்பிவிட்டதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

40 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

80 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

72 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

32 0 0