உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்யும் சட்டமூலம் அரசமைப்புக்கு முரணல்ல – உயர்நீதிமன்றம் தெரிவிப்பு.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
20 பார்வைகள்

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குரிய ஓய்வூதியத்தை இரத்துச் செய்யும் சட்டமூலம், அரசமைப்புக்கு முரணானதல்ல என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.இதன் காரணமாக, குறித்த சட்டமூலத்தை சாதாரண பெரும்பான்மையுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியும் என உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை இரத்துச் செய்வதாக தேசிய மக்கள் சக்தி அரசு முன்னதாக உறுதியளித்திருந்தது. அதற்கமைய, தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு, அமைச்சரவையின் அனுமதியுடன் குறித்த சட்டமூலம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, அந்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.இச்சட்டமூலத்திற்கு எதிராக சிலர் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். அவை தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட உயர்நீதிமன்றம், தனது தீர்ப்பை சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ளது.உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை, சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன இன்று காலை நாடாளுமன்றத்தில் அறிவித்தார். சட்டமூலத்தில் உள்ள எந்த விதிகளும் அரசமைப்பின் விதிகளை மீறவில்லை என்பதை உயர்நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

40 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

80 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

72 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

32 0 0