உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

விவசாயிகளை தேசிய Famernet.lk அமைப்பில் இணைக்கும் முயற்சி வாழைச்சேனையில்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
30 பார்வைகள்

வாழைச்சேனை கமநல சேவைகள் நிலையத்தினால் Famernet.lk தேசிய அமைப்பில் விவசாயிகளை பதிவு செய்யும் வேலைத்திட்டம்கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் Famernet.lk நிகழ்நிலை தேசிய அமைப்பில் சகல கமக்காரர்களையும் பதிவு செய்யும் பிரசாரம் மற்றும் ஊக்குவிப்பு வேலைத்திட்டங்களை ஏற்பாடு செய்யும் பொருட்டான வழிகாட்டல் தேசிய வேலைத்திட்டம் 03.02.2026 தொடக்கம் 17.02.2026 வரை இடம்பெறவுள்ளது.

அந்த வகையில் வாழைச்சேனை கமநல சேவைகள் நிலைய பிரிவுக்குட்பட்ட பூலாக்காடு கிராம சேவகர் பிரிவில் தவணை கமநல அமைப்பு கண்ட விவசாயிகளை Famernet.lk நிகழ்நிலை தேசிய அமைப்பில் சகல கமக்காரர்களையும் பதிவு செய்யும் பிரசாரம் மற்றும் ஊக்குவிப்பு வேலைத்திட்டம் இன்று 06.02.2026 வாழைச்சேனை கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் கோ.ஜெயக்காந்தன் அவர்களின் தலைமையில் சந்திவெளி புதுப் பிள்ளையார் ஆலய கலாசார மண்டபத்தில் கமநல சேவைகள் நிலைய உத்தியோகத்தர்களினால் முன்னெடுக்கப்பட்டது.

இவ் ஊக்குவிப்பு வேலைத்திட்டத்திட்டத்தில் சுமார் 250 மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தங்களுக்கான நிகழ்நிலை பதிவுகளை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.இந் நிகழ்வில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், விவசாயம் ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர், தவணை கமநல அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் விவசாயயிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

40 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

80 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

72 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

32 0 0