உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

போதைப்பொருள் பயன்படுத்திய பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் சிக்கினர்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
23 பார்வைகள்

கொழும்பில் போதைப்பொருள் பயன்படுத்திய பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் உள்ளிட்ட 8 பேர் நேற்று கண்டறியப்பட்டுள்ளனர்.

மொரட்டுவை பேருந்து தரிப்பிடத்திலிருந்து புறப்படும் பேருந்துகளின் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட விசேட போதைப்பொருள் பரிசோனையின் போதே இந்த 8 பேரும் கண்டறியப்பட்டுள்ளனர்.

இதன்போது, சுமார் 250 பேருந்து சாரதிகளும் நடத்துனர்களும் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் பயன்படுத்தியதாக கண்டறியப்பட்ட 8 பேரில் இருவர் ஹெரோயின் போதைப்பொருளும், ஐவர் கஞ்சா போதைப்பொருளும், ஒருவர் ஐஸ் போதைப்பொருளும், மற்றுமொருவர் ஐஸ், ஹெரோயின் உள்ளிட்ட இரண்டு போதைப்பொருட்களையும் பயன்படுத்தியுள்ளதாக பரிசோனையில் தெரியவந்துள்ளது.

இவ்வாறு போதைப்பொருள் பயன்படுத்தியதாக கண்டறியப்பட்ட 8 பேரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

38 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

80 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

71 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

32 0 0