உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் ஏற்பாட்டில் குடிநீர்த் தாங்கி வழங்கி வைப்பு.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
25 பார்வைகள்

கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் ஏற்பாட்டிலும், YWMA அமைப்பின் அனுசரணையுடனும், சாய்ந்தமருது அல்-கமறூன் வித்தியாலயத்தின் நீண்ட நாள் அத்தியாவசிய தேவையாக இருந்து வந்த குடிநீர்த் தாங்கி இன்று (06) உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது.

பாடசாலை மாணவர்களின் நலன் மற்றும் சுகாதார தேவைகளை கருத்தில் கொண்டு, குடிநீர்த் தாங்கி ஒன்றை பெற்றுத் தருமாறு பாடசாலை நிர்வாகம் கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபக தலைவர் ரஹ்மத் மன்சூர் அவர்களிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக, குறுகிய காலத்திற்குள் தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு இத்திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.

இந்நிகழ்வில் பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், கல்முனை Top Queen Printers நிறுவனத்தின் பணிப்பாளர் M. இல்‌ஹாம், ரஹ்மத் பவுண்டேசன் உறுப்பினர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு இந்நிகழ்வை சிறப்பித்தனர்.

மாணவர்களின் அடிப்படை தேவைகளுக்கு தீர்வு காணும் நோக்குடன் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் இவ்வகையான மனிதநேயச் சேவைகள் சமூகத்திற்கு ஒரு சிறந்த முன்மாதிரியாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

38 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

80 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

71 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

32 0 0