உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

வைரஸ் தொற்றால் சென்னையில் உயிரிழந்த நூற்றுக்கணக்கான காகங்கள்!

இந்திய செய்திகள் 8 மாதங்கள் முன்
59 பார்வைகள்

சென்னை முழுவதும் கடந்த சில நாட்களில் நூற்றுக்கணக்கான காகங்கள் இறந்து கிடந்தன.உயிரிழந்த காங்கள் ஆய்வக சோதனைகளில் H5N1 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.இந்த சோதனை இப்பகுதியில் பறவைக் காய்ச்சல் பரவுவதை எடுத்துக் காட்டுகின்றது.இதேவேளை, தொற்றுநோயைக் கட்டுப்படுத்த சுகாதார அதிகாரிகள் தயாராகி வருவதால், பொது மக்களுக்கு விசேட சுகாதார ஆலோசனையும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் வைரஸ் பரவுவதைத் தடுக்க, உயிரிழந்த காகங்கள் மற்றும் கோழிகளின் அனைத்து உடல்களையும் உயிரியல் பாதுகாப்பு நெறிமுறைகளின்படி எரிக்க அல்லது ஆழமாகப் புதைக்க வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.இறந்த பறவைகளைத் தொடுவதையோ அல்லது கையாளுவதையோ பொதுமக்கள் கண்டிப்பாகத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் மர்மமாக உயிரிழந்த ஏதேனும் பறவைகள் தென்பட்டால் உள்ளூர் அதிகாரிகளுக்கு உடனடியாகத் தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.\இந்த நிலையில், இந்திய மத்திய கால்நடை பராமரிப்பு அமைச்சு, தமிழ்நாடு தலைமைச் செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளது.அந்தக் கடிதத்தில் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த உடனடி மற்றும் விரிவான கள கண்காணிப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

42 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

40 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

27 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

43 0 0