உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

கணேமுல்ல சஞ்சீவ கொ*லை வழக்கில் சிக்கிய பெண் சட்டத்தரணி தொடர்பில் வெளியான தகவல்கள்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
21 பார்வைகள்

கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் கடந்த 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு தொடர்ந்து பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி தொடர்பில் பல தகவல்கள் வெளியாகியுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள், கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ்.போதரகம கூறியுள்ளனர்.

குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றில் தெரிவிக்கையில்,
“கணேமுல்ல சஞ்சீவ” கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சட்டத்தரணி கைது செய்யப்பட்ட வேளையில் கைப்பற்றப்பட்ட சொகுசு வாகனம் சுமார் இரண்டரை கோடி ரூபா பெறுமதியானது என விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சொகுசு வாகனம் முதலில் வில்பிரட் திசாநாயக்க என்பவரின் பெயரில் இருந்துள்ளதாகவும் பின்னர் அது சட்டத்தரணிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சட்டத்தரணி இந்த சொகுசு வாகனத்தை வாங்குவதற்கு எவ்வாறு பணம் சம்பாதித்தார் என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அத்துடன், சட்டத்தரணிக்கு சொந்தமான வங்கி கணக்குகள் குறித்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

37 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

80 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

71 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

32 0 0