உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

அமெரிக்கா – ஈரான், ஓமானில் இன்று உயர்மட்ட பேச்சுவார்தை.!

உலக செய்திகள் 8 மாதங்கள் முன்
42 பார்வைகள்

பல மாதங்களாக அதிகரித்து வரும் பதட்டங்கள், மாறிவரும் இராஜதந்திர சமிக்ஞைகளுக்குப் பின்னர் அமெரிக்காவும் ஈரானும் இன்று (06) ஓமான் தலைநகர் மஸ்கட்டில் அணுசக்தி பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளன.சர்வதேச அளவில் தீவிரமான கண்காணிப்பை ஈர்த்துள்ள இந்தப் பேச்சுவார்த்தைகள், அண்மைய இராணுவ மோதல்கள், ஈரான் போராட்டக்காரர்கள் மீதான தெஹ்ரானின் கொடிய ஒடுக்குமுறை மற்றும் மத்திய கிழக்கில் ஒரு பரந்த மோதல் வெடிக்கும் என்ற தொடர்ச்சியான அச்சங்கள் ஆகியவற்றின் பின்னணியில் வருகின்றன.

இரு தரப்பினரும் மோதலுக்கும் இராஜதந்திரத்திற்கும் இடையில் ஊசலாடிய ஒரு சரித்திரத்தின் அண்மைய அத்தியாயமாக இந்தப் பேச்சுவார்த்தைகள் அமைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.ஓமான் ‍உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு திட்டமிடப்பட்டுள்ள இந்த பேச்சுவார்தையில் ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராச்சி மற்றும் அமெரிக்க சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் ஆகியோர் பங்கேற்பார்கள்.

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மூத்த ஆலோசகர் ஜாரெட் குஷ்னரும் இந்தப் பேச்சுவாத்தையில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அமெரிக்காவும் ஈரானும் ஆரம்பத்தில் துருக்கியின் இஸ்தான்புல்லில் பேச்சுவார்த்தையை நடத்துவதற்கு ஒப்புக்கொண்டன.எனினும், பின்னர் பேச்சுவார்த்தைகளை ஓமானுக்கு நகர்த்தவும், அணுசக்தி பிரச்சினைகளுக்கு நிகழ்ச்சி நிரலை சுருக்கவும் ஈரான் வலியுறுத்தியது.

1979 ஆம் ஆண்டு இஸ்லாமியப் புரட்சிக்குப் பின்னர் ஈரானின் இறையாட்சி இப்போது அதன் பலவீனமான கட்டத்தில் இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ போன்ற அதிகாரிகள் நம்புகின்றனர்.கடந்த மாதம் நாடு தழுவிய போராட்டங்கள் 86 வயதான உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் ஆட்சிக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்தன.கமேனியின் படைகள் இரத்தக்களரியான ஒடுக்குமுறையுடன் பதிலளித்தன.இதில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர், பல்லாயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நாட்டை குறிவைத்து புதிய இராணுவ அச்சுறுத்தல்களை முன்வைத்தார்.1980 முதல் அதிகாரப்பூர்வ இராஜதந்திர உறவுகள் இல்லாத இரு நாடுகளுக்கும் இடையே இராஜதந்திரத்தை புதுப்பிக்கும் முயற்சியில் ஈரானிய மற்றும் அமெரிக்க அதிகாரிகள் சந்திப்பது இது முதல் முறை அல்ல.

ஜூன் மாதம், அணுசக்தி ஒப்பந்தம் குறித்து விவாதிக்க அமெரிக்க மற்றும் ஈரானிய அதிகாரிகள் ஓமானி தலைநகரில் கூடினர்.ஆனால் இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல்களைத் தொடங்கியதால் இந்த செயல்முறை ஸ்தம்பித்தது.பின்னர் அமெரிக்கா சிறிது காலம் போரில் இணைந்தது, பல ஈரானிய அணுசக்தி தளங்களை குண்டுவீசித் தாக்கியமையும் குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

24 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

22 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

46 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

42 0 0