உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

வடக்கு, கிழக்கில் கரிநாள் பேரணிக்கு எதிராக மஹிந்த அணி போர்க்கொடி.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
27 பார்வைகள்

இலங்கையின் 78 ஆவது சுதந்திர தினத்தன்று வடக்கு, கிழக்கில் கரிநாள் அனுஷ்டிக்கப்பட்டு பேரணி நடத்தப்பட்டமை தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளது.

கொழும்பில் உள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே முன்னாள் இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த இவ்வாறு அதிருப்தி வெளியிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஷிரந்தி ராஜபக்ஷவை எப்.சி.ஐடிக்கும், நாமல் ராஜபக்ஷவை சி.ஐ.டிக்கும் ஒரே நாளில் – ஒரே நேரத்தில் அழைக்கின்றனர்.

ராஜபக்ஷக்களுக்கு எதிரான அரசியல் பழிவாங்கல் வேட்டையின் ஓர் அங்கம்தான் இது.

அரசு தமது இயலாமையை மூடிமறைத்துக்கொள்வதற்காகவே ராஜபக்ஷக்களை இவ்வாறு குறிவைக்கின்றது.

படையினர் போரை முடிவுக்குக் கொண்டு வந்ததால்தான் இன்று ஜனாதிபதி உட்பட நாட்டு மக்களுக்குச் சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடிகின்றது.

இவ்வாறு பெரும் சேவையாற்றிய படையினரை, டித்வா புயலுடன் மட்டும் மட்டுப்படுத்துவதற்கு இந்த ஆட்சியின் கீழ் முயற்சி எடுக்கப்படுகின்றது.

இனவாதத்துக்கு இடமில்லை என ஜனாதிபதி கூறுகின்றார். இது நல்லது. ஆனால், வடக்கு, கிழக்கில் இனவாதம் தூண்டப்பட்டுள்ளது. சுதந்திர தினத்தில் அங்கு கறுப்புக்கொடி ஏற்றப்பட்டுள்ளது. அங்கு கரிநாள் அனுஷ்டிக்கப்பட்டு பேரணி நடத்தப்பட்டுள்ளது.

எனவே, இனவாதத்துக்கு இடமில்லை எனக் கூறிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அதனைச் செயலில் காட்ட வேண்டும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

0 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

77 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

70 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

31 0 0