உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

இஸ்ரேல் ஜனாதிபதி ஆஸி. வருகை – சிட்னியில் போராட்டங்களுக்கு தடை.!

உலக செய்திகள் 8 மாதங்கள் முன்
44 பார்வைகள்

இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹர்சக்கின் அவுஸ்திரேலிய வருகைக்கு எதிராக சிட்னியில் போராட்டங்களை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள நிலையில், போராட்டங்கள்மீதான தடையை நியூ சவுத் வேல்ஸ் மாநிலம் நீடித்துள்ளது.

சிட்னி, போண்டி கடற்கரையில் டிசம்பர் 14 ஆம் திகதி யூத சமூகத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டனர்.இச்சம்பவத்தால் அவுஸ்திரேலியா மற்றும் இஸ்ரேலுக்கிடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது.

யூத சமூகத்தின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என இஸ்ரேல் வலியுறுத்தியது.இந்நிலையில் தமது நாட்டுக்கு வருகை தருமாறு இஸ்ரேல் ஜனாதிபதிக்கு அவுஸ்திரேலியா அழைப்பு விடுத்துள்ளது.இந்த அழைப்பை ஏற்று எதிர்வரும் 8 ஆம் திகதி இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹர்சக் அவுஸ்திரேலியா வருகின்றார்.

அவரின் வருகைக்கு பலஸ்தீன ஆதரவு அமைப்புகள் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளன. போராட்டங்களை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.அவுஸ்திரேலியாவில் 12 ஆம் திகதிவரை தங்கியிருப்பதற்கு திட்டமிட்டுள்ள இஸ்ரேல் ஜனாதிபதி, யூத சமூகத்தினருடன் சந்திப்புகளை நடத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

24 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

22 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

46 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

42 0 0