உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

ரஷ்யா – உக்ரைன் அடுத்த கட்ட அமைதிப் பேச்சு நாளை ஆரம்பம்.!

உலக செய்திகள் 8 மாதங்கள் முன்
44 பார்வைகள்

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான இரண்டாம் கட்ட முத்தரப்பு அமைதிப் பேச்சுவார்த்தை, ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தலைநகர் அபுதாபியில் நாளை 04 ஆம் திகதி ஆரம்பமாக உள்ளது.

இப்பேச்சுவார்த்தை மறுநாள் 05 ஆம் திகதியும் நடைபெறும் என்று உக்ரைன் ஜனாதிபதி ஸெலென்ஸ்கி நேற்று முன்தினம் தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் டெலிகிராம் பதிவிட்டிருப்பதாவது, ‘உக்ரைன் பேச்சுவார்த்தை குழுவிடமிருந்து எனக்கு அறிக்கை கிடைத்துள்ளது.

இப்போருக்கு உண்மையாகவும், கௌரவமாகவும் தீர்வு காணும் நோக்கில் ஆக்கபூா்வமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட நாங்கள் தயாராக இருக்கிறோம்’ என்றுள்ளார். சுமார் 4 ஆண்டுகளாக நீடித்து வரும் இப்போரை நிறுத்த, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாகம் கடந்த ஓரண்டாகத் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, அபுதாபியில் ரஷ்யா, உக்ரைன், அமெரிக்கா ஆகிய 3 நாடுகளும் பங்கேற்கும் முத்தரப்புச் பேச்சுவார்த்தை நாளை ஆரம்பமாகவுள்ளது. இதேவேளை, ரஷ்யாவின் உயர்மட்டத் தூதர் கிரில் டிமிட்ரிவ், அமெரிக்காவின் புளோரிடாவில் அந்நாட்டின் அமைதித் தூதுக்குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அந்த ஆலோசனையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

24 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

22 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

46 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

42 0 0