உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் 4.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவு.!

உலக செய்திகள் 8 மாதங்கள் முன்
43 பார்வைகள்

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் இன்று (02) அதிகாலை 3.30 மணியளவில் 4.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய தேசிய நில அதிர்வு மையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலநடுக்கம் 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.

காம்பெல் விரிகுடாவிலிருந்து வடகிழக்கே சுமார் 256 கிலோ மீட்டர் தொலைவில் இதன் மையப்பகுதி அமைந்திருந்தது.இந்த நிலநடுக்கத்தினால் உண்டான சேதம் அல்லது உயிர் இழப்பு குறித்த இதுவரை தகவல்கள் எதுவும் இல்லை.

மேலும் இந்த நிலநடுக்கத்தினால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் இந்தியாவின் நில அதிர்வு வரைபடத்தில் அதிக ஆபத்துள்ள வகையான நில அதிர்வு மண்டலம் V இல் அமைந்துள்ளன.

இதனால் இப்பகுதி அடிக்கடி நில அதிர்வு நடவடிக்கைகளுக்கு ஆளாகிறது.கடந்த காலங்களில் பல பெரிய நிலநடுக்கங்கள் இங்கு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

24 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

22 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

46 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

42 0 0