உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

ஐஸ் போதைப்பொருளுடன் தம்பதியினர் கைது.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
19 பார்வைகள்

புத்தளம் பொலிஸாரின் நச்சுப் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் நேற்று (01) முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது, 524 கிராம் ஐஸ் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆனைமடுவ பகுதியைச் சேர்ந்த 28 மற்றும் 23 வயதுடைய தம்பதியினரே புத்தளம் – மெல்லன்குளம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் ஒன்றும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் இப்பாகமுவ பகுதியில் உள்ள தமது பாட்டியின் வீட்டில் தங்கியிருந்து போதைப்பொருள் வியாபாரத்தை முன்னெடுத்து வந்துள்ளமை பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் சந்தை பெறுமதி சுமார் 80 இலட்சம் ரூபாய் என பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தளம் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் உள்ள இளைஞர்களுக்கு, வெளிப்பகுதிகளில் இருந்து போதைப்பொருளைக் கொண்டு வந்து விற்பனை செய்யும் தம்பதியினர் குறித்து பொலிஸாருக்குத் தகவல் கிடைத்தது.

இதனடிப்படையில், சுமார் ஒரு மாத காலமாக முன்னெடுக்கப்பட்ட இரகசிய கண்காணிப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து, போதைப்பொருளைக் கடத்திச் சென்ற போதே குறித்த தம்பதியினர் கைதாகியுள்ளனர்.

வெளிநாடுகளில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் இந்தத் தம்பதியினர் நேரடித் தொடர்புகளைப் பேணி வந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்காக சந்தேக நபர்களைத் தடுத்து வைத்து விசாரணை செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மாந்தை மேற்கு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் “கோப் சிற்றி” வைபவ ரீதியாக திறந்து வைப்பு

மாந்தை மேற்கு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் கோப் சிற்றி வைபவ ரீதியாக திறந்து வைப்பு (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (24-08-2026)மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பலநோக்கு கூட்டுறவு…

46 0 0
இலங்கை செய்திகள்

அரசு விடுவித்த காணாமல் போனோர் பற்றிய தகவல்களைத் தாருங்கள் – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கோரிக்கை

அரசு விடுவித்த காணாமல் ஆட்கள் பற்றிய தகவல்களைத் தாருங்கள். அது தான் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு அரசு செய்கின்ற நியாயமான செயலாக…

97 0 0
இலங்கை செய்திகள்

மன்னாரில் 2 ஆயிரம் மெட்ரிக் தொன் அளவிலான நெல்லைக் கொள்வனவு செய்ய நடவடிக்கை

மன்னார் மாவட்டத்தில் நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக 2 ஆயிரம் மெட்ரிக் தொன் அளவிலான நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை- மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன்…

65 0 0
இலங்கை செய்திகள்

அரசின் தொலைநோக்கற்ற ஆட்சியால் மக்கள் பேரவலம் – சஜித் குற்றச்சாட்டு

அரசின் தொலைநோக்கற்றஆட்சியால் மக்கள் பேரவலம் தற்போதைய அரசின் தொலைநோக்கற்ற ஆட்சியினால் நாட்டின் மக்கள் பாரிய அவதிக்குள்ளாகியுள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். பொய்கள் மற்றும்…

58 0 0