உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் இருவர் உயிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
16 பார்வைகள்

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (01) இடம்பெற்ற வாகன விபத்துக்களில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

அதன்படி, பிங்கிரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிலாபம் – குருநாகல் வீதியில் மேல் கொஸ்வத்த பகுதியில், இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் ஹல்மில்லேவ பகுதியை சேர்ந்த 13 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது

வீதியோரத்தில் நடந்து சென்ற இரண்டு சிறுவர்கள் மீது சிலாபம் நோக்கிப் பயணித்த லொறி ஒன்று மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

விபத்தில் காயமடைந்த இரண்டு சிறுவர்களும் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

பிங்கிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேநேரம், யட்டியன்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் பிலிங்கஹஹேன பகுதியில், இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கித்துல்கல நோக்கிப் பயணித்த உந்துருளி எதிர் திசையில் வந்த டிப்பர் வாகனத்துடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இதன்போது, விபத்தில் உந்துருளி ஓட்டுநர் மற்றும் பயணி காயமடைந்து தளிகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் வெல்லம்பிட்டிய பகுதியை சேர்ந்த 22 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மாந்தை மேற்கு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் “கோப் சிற்றி” வைபவ ரீதியாக திறந்து வைப்பு

மாந்தை மேற்கு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் கோப் சிற்றி வைபவ ரீதியாக திறந்து வைப்பு (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (24-08-2026)மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பலநோக்கு கூட்டுறவு…

46 0 0
இலங்கை செய்திகள்

அரசு விடுவித்த காணாமல் போனோர் பற்றிய தகவல்களைத் தாருங்கள் – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கோரிக்கை

அரசு விடுவித்த காணாமல் ஆட்கள் பற்றிய தகவல்களைத் தாருங்கள். அது தான் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு அரசு செய்கின்ற நியாயமான செயலாக…

97 0 0
இலங்கை செய்திகள்

மன்னாரில் 2 ஆயிரம் மெட்ரிக் தொன் அளவிலான நெல்லைக் கொள்வனவு செய்ய நடவடிக்கை

மன்னார் மாவட்டத்தில் நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக 2 ஆயிரம் மெட்ரிக் தொன் அளவிலான நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை- மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன்…

65 0 0
இலங்கை செய்திகள்

அரசின் தொலைநோக்கற்ற ஆட்சியால் மக்கள் பேரவலம் – சஜித் குற்றச்சாட்டு

அரசின் தொலைநோக்கற்றஆட்சியால் மக்கள் பேரவலம் தற்போதைய அரசின் தொலைநோக்கற்ற ஆட்சியினால் நாட்டின் மக்கள் பாரிய அவதிக்குள்ளாகியுள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். பொய்கள் மற்றும்…

58 0 0