போதைப்பொருள் சோதனையில் ஈடுபட்ட பொலிஸார் மீது தாக்குதல்; சிக்கிய கும்பல்.!
கல்வலயாய பிரதேசத்தில் நேற்று முன்தினம் சனிக்கிழமை (31) இரவு பொலிஸ் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் நான்கு பேர் மகாஓயா பொலிஸாரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (01) கைது செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் பொல்லெபெத்த பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
மகாஓயா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரிகள் குழு போதைப்பொருள் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதலில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் படுகாயமடைந்துள்ள நிலையில் மகாஓயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் மகாஓயா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.