உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

தொழிற்கட்சியில் இருந்து விலகினார் லோர்ட் மண்டேல்சன்!

உலக செய்திகள் 8 மாதங்கள் முன்
41 பார்வைகள்

மறைந்த பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான நட்பு குறித்த புதிய வெளிப்பாடுகளைத் தொடர்ந்து, அமெரிக்காவிற்கான முன்னாள் இங்கிலாந்து தூதர் லோர்ட் மண்டேல்சன் (Lord Mandelson) தொழிலாளர் கட்சியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார்.இராஜினாமா குறித்து தொழிலாளர் கட்சியின் பொதுச் செயலாளர் ஹோலி ரிட்லிக்கு எழுதிய கடிதத்தில் லார்ட் மண்டேல்சன், எப்ஸ்டீனுடனான தனது தொடர்புகளால் மேலும் சங்கடத்தை ஏற்படுத்த விரும்பவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த ஆண்டு செப்டம்பரில், எப்ஸ்டீனுடன் தொடர்புகள் இருந்ததால், அமெரிக்காவிற்கான தூதர் பதவியில் இருந்து மண்டேல்சனை பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் நீக்கினார்.கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க நீதித்துறையின் அண்மைய ஆவணங்கள் வெளியிட்டதைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை (01) கட்சியில் இருந்து அவர் இராஜினாமா செய்துள்ளார்.

2003 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் மண்டேல்சனுடன் இணைக்கப்பட்ட கணக்குகளுக்கு எப்ஸ்டீன் தலா $25,000 வீதம் மொத்தம் $75,000 என மூன்று தனித்தனி பணம் செலுத்தியதாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

24 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

22 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

46 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

42 0 0