உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிராக நெடுங்கேணியில் இன்று பெரும் போராட்டம்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
16 பார்வைகள்

அரசின் கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று திங்கட்கிழமை வவுனியா – நெடுங்கேணியில் பெரும் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்தப் போராட்டத்தில் தமிழ் மக்கள் பெருந்திரளாகப் பங்கேற்க வேண்டும் என்று ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

இன்று முற்பகல் 10 மணிக்கு நெடுங்கேணி பேருந்து நிலையம் முன்பாக ஒன்றுகூடும் போராட்டக்காரர்கள் அங்கிருந்து பேரணியாக நெடுங்கேணி பிரதேச செயலகம் வரை நகர்ந்து ஆர்ப்பாட்டத்தை முன்னெடுப்பர். போராட்டத்தின் நிறைவில் மனு ஒன்றும் கையளிக்கப்படவுள்ளது.

இந்தப் போராட்டத்துக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி, ரெலோ உள்ளிட்ட அரசியல் கட்சிகள், வன்னி மாவட்ட பொது அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களை மையப்படுத்தி கிவுல் ஓயா திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இந்த மாவட்டங்களுக்குத் தண்ணீரை இலகுவாகக் கிடைக்கச் செய்யும் நோக்கில் – மகாவலி எல் வலயத்தின் ஒரு பகுதியாக முன்னெடுக்கப்படும் இந்தத் திட்டத்தின் மூலம் தமிழ் மக்களின் பூர்வீக நிலப் பகுதிகள் பெருமளவில் பறிபோகும் என்பதுடன் குடியேற்றங்கள் மூலமாக குடிப்பரம்பலும் திட்டமிட்ட முறையில் மாற்றியமைக்கப்படும் என்று கூறப்படுகின்றது.

2011ஆம் ஆண்டு அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அமைச்சரவையால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டம் எதிர்ப்புகள் மற்றும் நிதிப் பிரச்சினையால் கிடப்பில் போடப்பட்டது. இந்தநிலையில், இந்தத் திட்டத்தை 2 ஆயிரத்து 350 கோடி ரூபாவில் செயற்படுத்தத் தற்போதைய அரசு திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மாந்தை மேற்கு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் “கோப் சிற்றி” வைபவ ரீதியாக திறந்து வைப்பு

மாந்தை மேற்கு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் கோப் சிற்றி வைபவ ரீதியாக திறந்து வைப்பு (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (24-08-2026)மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பலநோக்கு கூட்டுறவு…

46 0 0
இலங்கை செய்திகள்

அரசு விடுவித்த காணாமல் போனோர் பற்றிய தகவல்களைத் தாருங்கள் – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கோரிக்கை

அரசு விடுவித்த காணாமல் ஆட்கள் பற்றிய தகவல்களைத் தாருங்கள். அது தான் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு அரசு செய்கின்ற நியாயமான செயலாக…

97 0 0
இலங்கை செய்திகள்

மன்னாரில் 2 ஆயிரம் மெட்ரிக் தொன் அளவிலான நெல்லைக் கொள்வனவு செய்ய நடவடிக்கை

மன்னார் மாவட்டத்தில் நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக 2 ஆயிரம் மெட்ரிக் தொன் அளவிலான நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை- மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன்…

65 0 0
இலங்கை செய்திகள்

அரசின் தொலைநோக்கற்ற ஆட்சியால் மக்கள் பேரவலம் – சஜித் குற்றச்சாட்டு

அரசின் தொலைநோக்கற்றஆட்சியால் மக்கள் பேரவலம் தற்போதைய அரசின் தொலைநோக்கற்ற ஆட்சியினால் நாட்டின் மக்கள் பாரிய அவதிக்குள்ளாகியுள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். பொய்கள் மற்றும்…

58 0 0