உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

ஜப்பானுடன் பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் விநியோகச் சங்கிலி உறவுகளை வலுப்படுத்த இங்கிலாந்து பிரதமர் திட்டம்!

உலக செய்திகள் 8 மாதங்கள் முன்
31 பார்வைகள்

பிரித்தானியப் பிரதமர் கீர் ஸ்டார்மர், ஜப்பானுடன் பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் விநியோகச் சங்கிலி உறவுகளை வலுப்படுத்தத் திட்டமிட்டுள்ளார்.இந்த இரு நாடுகளும் இந்தோ-பசிபிக் பிராந்திய அமைதி மற்றும் உக்ரைன் ஆதரவில் இணைந்து செயல்படவும், முக்கிய கனிமவள வர்த்தகத்தை மேம்படுத்தவும் முயல்கின்றன.

டோக்கியோவில் நடந்த பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, ஜப்பான் பிரதமர் சானே தகைச்சியை இங்கிலாந்துக்கு வருகை தருமாறு இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர் அழைப்பு விடுத்துள்ளார்.இதேவேளை, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு “பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு” வலிமையானது என்று குறித்த சந்திப்பு குறித்து பிரதமர் கூறியுள்ளார்.

சீனாவிற்கான நான்கு நாள் பயணத்திற்குப் பின்னர் பிரதமர் ஜப்பான் சென்றுள்ளார்.இதன்போது அவர் பெய்ஜிங்குடனான இங்கிலாந்தின் உறவை மீண்டும் கட்டியெழுப்ப முயன்றார்.இங்கிலாந்து மற்றும் ஜப்பான் தலைவர்கள் தங்கள் “கூட்டு மதிப்புகள்” குறித்து விவாதித்ததாகவும், இந்தோ-பசிபிக் பிராந்தியம் முழுவதும் பாதுகாப்பு மற்றும் கூட்டாண்மைகளை அதிகரிப்பது உட்பட வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான திட்டங்களை வகுத்ததாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உலகில் அதிகரித்து வரும் ஸ்திரமின்மைக்கு “வலிமையுடனும் தெளிவுடனும்” பதிலளிக்க வேண்டியதன் அவசியத்தை தானும் தனது ஜப்பானிய சகாவும் ஒப்புக்கொண்டதாக இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர் மேலும் கூறியுள்ளதுடன் “உக்ரைனை ஆதரிப்பதில் உறுதியான தலைமைக்கு” அவருக்கு நன்றியும் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

24 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

22 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

46 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

42 0 0