உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

நேற்றிரவு அலி கமெனி விடுத்த அதிரடி எச்சரிக்கை.!

உலக செய்திகள் 8 மாதங்கள் முன்
50 பார்வைகள்

ஈரானிய உயர்மட்ட தலைவர் அயதுல்லா, அலி கமெனியின் உரையைத் தொடர்ந்து, ஈரான் ஒரு ஒப்பந்தத்திற்கு ஒப்புக் கொள்ளும் என்று நம்புவதாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.நேற்றிரவு, அலி கமெனி வழங்கிய பொது உரை ஒன்றில் அமெரிக்கா தாக்கினால் ஏற்படபோகும் மோசமான விளைவுகள் தொடர்பில் கடுமையாக எச்சரித்தார்.

இந்நிலையில், இது தொடர்பில் ட்ரம்பிடம் வினவிய போது, “நாம் ஒரு ஒப்பந்தம் செய்வோம் என்று நம்புகிறோம். நாம் ஒரு ஒப்பந்தம் செய்யவில்லை என்றால், அவர் சொல்வது சரியா இல்லையா என்பதைக் கண்டுபிடிப்போம்” என குறிப்பிட்டுள்ளார்.ஈரானை அமெரிக்கா தாக்கினால் அது முழு மத்திய கிழக்குப் பகுதியையும் பாதிக்கும் மண்டல போராக மாறும் என ஈரான் உயர் தலைவர் அயத்துல்லா அலி கமெனி அமெரிக்காவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மத்திய கிழக்கு பகுதியில் பெரும் இராணுவ சக்திகளை குவித்து வரும் நிலையில், இன்று டெஹ்ரானில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கமெனி இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார்.

இதன்போது அவர், “இந்த முறை அவர்கள் போரை ஆரம்பித்தால், அது ஒரு மண்டல போராக மாறும் என்பதை அவர்கள் நன்றாக அறிந்து கொள்ள வேண்டும்” என கமெனி குறிப்பிட்டுள்ளார். மேலும், கடந்த 37 ஆண்டுகளாக ஈரானின் முழு அதிகாரத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அலி கமெனி, தொடர்ந்து அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்கு கடுமையான பதில்களையும் எச்சரிக்கைகளையும் வழங்கி வருகின்றார்.

இன்று, 1979 ஆம் ஆண்டு பிரான்சிலிருந்து ஈரானுக்கு அயத்துல்லா ரூஹுல்லா கோமெய்னி திரும்பி வந்ததன் ஆண்டு நினைவை முன்னிட்டு நடத்தப்பட்ட நிகழ்வில் உரையாற்றும் போது அமெரிக்காவை கடுமையாக எச்சரித்துள்ளார்.

அமெரிக்கா ஈரானின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வளங்களை கைப்பற்ற விரும்புகிறது என குற்றம் சாட்டிய கமெனி, சமீபத்தில் நடந்த அரசுக்கு எதிரான போராட்டங்கள் ஒரு கூப்பை (coup) போன்றவை என கூறினார்.அந்த போராட்டங்களின் போது பல அரசு அலுவலகங்கள், வங்கிகள் மற்றும் பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டதாகவும், இதை அவர் “மற்றொரு சதி (sedition)” என விவரித்தார்.

இதே சொல்லை அவர் 2009 ஆம் ஆண்டு நடந்த Green Movement உள்ளிட்ட போராட்டங்களுக்கும் பயன்படுத்தியிருந்தார். “சமீபத்திய சதி ஒரு கூப்பைப் போன்றது என்ற வார்த்தையை அப்போதே பயன்படுத்தி குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், அந்த கூப் தோல்வியடைந்தது என கூறிய கமெனி, பொலிஸ் நிலையங்கள், அரசு கட்டிடங்கள், IRGC (இஸ்லாமிய புரட்சிக் காவல் படை) முகாம்கள், வங்கிகள் மற்றும் பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டதாக தெரிவித்தார். மேலும், குர்ஆன் பிரதிகளும் எரிக்கப்பட்டதாக அவர் குற்றம் சாட்டினார்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

23 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

21 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

45 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

41 0 0