உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

ட்ரம்பின் தீவிரமான குடியேற்றக் கட்டுப்பாடுகள்! வீழ்ச்சியடைந்துள்ள மக்கள் தொகை.!

உலக செய்திகள் 8 மாதங்கள் முன்
50 பார்வைகள்

அமெரிக்க சனத்தொகை கணக்கெடுப்பு சபை வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் தீவிரமான குடியேற்றக் கட்டுப்பாடுகள் காரணமாக அமெரிக்காவின் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 0.5 சதவீதமாகக் குறைந்துள்ளது.

குறிப்பாக, 2024-ல் 2.7 மில்லியனாக இருந்த நிகர சர்வதேசக் குடியேற்றம் 2025-ல் 1.3 மில்லியனாகப் பாதியாகச் சரிந்துள்ளது.2026-ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை மேலும் குறைந்து, சுமார் 3.2 லட்சமாக மாறும் என்றும், இது எதிர்மறையான நிலையை எட்டக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.ட்ரம்ப் அரசின் தீவிர நாடுகடத்தல் நடவடிக்கைகள் மற்றும் சுமார் 75 நாடுகளுக்கு குடியேற்ற விசா வழங்கத் தற்காலிகத் தடை விதித்தது போன்ற அதிரடி முடிவுகளே இந்த வரலாற்றுச் சரிவுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

இதனைத் தனது அரசின் மிகப்பெரிய வெற்றியாகக் கருதும் ட்ரம்ப் நிர்வாகம், இதன் மூலம் வரி செலுத்துவோரின் பணம் சேமிக்கப்படுவதாகவும், அமெரிக்கர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகள் மற்றும் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

23 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

21 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

45 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

41 0 0