உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

தென் சீனக் கடலில் போர் பதற்றம்!

உலக செய்திகள் 8 மாதங்கள் முன்
40 பார்வைகள்

சர்ச்சைக்குரிய தென் சீனக் கடல் பகுதியில் அமெரிக்காவின் நாசகாரி கப்பலான யுஎஸ்எஸ் ஹிக்கின்ஸ் (USS Higgins) மற்றும் சீனப் போர்க்கப்பல்கள் இடையே கடந்த புதன்கிழமை ஒரு பயங்கரமான மோதல் போக்கு அரங்கேறியுள்ளது.

சீன ராணுவத்தின் தெற்குப் பிராந்திய கட்டளைப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமெரிக்காவின் யுஎஸ்எஸ் ஹிக்கின்ஸ் போர்க்கப்பல், சீன அரசின் அனுமதியின்றி ஸ்கார்பரோ ஷோல் (Scarborough Shoal) பகுதிக்குள் நுழைந்தது.இதனையடுத்து சீனக் கடற்படை அந்தப் போர்க்கப்பலைக் கண்காணித்து, அங்கிருந்து விரட்டியடித்தது” என்று தெரிவித்துள்ளது.அமெரிக்காவின் இந்த நடவடிக்கை சீனாவின் இறையாண்மையைக் கடுமையாக மீறுவதாகவும், பிராந்திய அமைதியைக் குலைப்பதாகவும் சீனா சாடியுள்ளது.

சீனாவின் இந்தக் கூற்றை அமெரிக்கக் கடற்படையின் 7-வது படைப்பிரிவு திட்டவட்டமாக மறுத்துள்ளது. “யுஎஸ்எஸ் ஹிக்கின்ஸ் சர்வதேசச் சட்டங்களுக்கு உட்பட்டே அந்தப் பகுதியில் பயணம் செய்தது.கடற்பயண சுதந்திரத்தை’ (Freedom of Navigation) நிலைநாட்டவே இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட்டது. சீனாவின் தவறான அறிக்கைகள் எங்களின் கடமையைத் தடுக்காது” என்று அமெரிக்கா பதிலளித்துள்ளது.

கடந்த திங்கட்கிழமை, பிலிப்பைன்ஸ் நாட்டுப் படகைத் துரத்திச் சென்றபோது, சீனக் கடற்படைக் கப்பல் ஒன்று அதன் சொந்தக் கடலோரக் காவல் படை கப்பல் மீதே மோதி விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.இந்த மோதல்கள் குறித்து அவுஸ்திரேலியத் தூதரகம் கவலை தெரிவித்துள்ளது.இரு நாடுகளும் சர்வதேசச் சட்டங்களை மதித்து, பதற்றத்தைத் தணிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

ஸ்கார்பரோ ஷோல் பகுதி வழியாக ஆண்டுதோறும் சுமார் 3 ட்ரில்லியன் டொலர் மதிப்பிலான வர்த்தகம் நடைபெறுவதால், இந்தப் பகுதியைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க சீனா தொடர்ந்து முயன்று வருகிறது.அமெரிக்காவின் இந்த நேரடித் தலையீடு அப்பகுதியில் போர் மேகங்களைச் சூழ்ந்துள்ளதாகப் பார்க்கப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

23 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

21 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

45 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

41 0 0