உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கடுமையான கண் நோயினால் பாதிப்பு.!

உலக செய்திகள் 8 மாதங்கள் முன்
41 பார்வைகள்

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கடுமையான கண் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (PTI) கட்சி தெரிவித்துள்ளது.இதற்கு உடனடி சிகிச்சை அளிக்காவிட்டால், அவரது பார்வைத்திறன் கடுமையாகப் பாதிக்கப்படக்கூடும் என அக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


73 வயதான இம்ரான் கான், 2023 ஓகஸ்ட் முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது ராவல்பிண்டியில் உள்ள அதியாலா சிறையில் தனது சிறைத்தண்டனையை அனுபவித்து வருகிறார்.
சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், நம்பகமான ஊடக ஆதாரங்களை மேற்கோள் காட்டி பி.டி.ஐ கட்சி தெரிவித்துள்ளதாவது, முன்னாள் பிரதமரின் வலது கண்ணில் ‘ரெட்டினல் வெய்ன் ஒக்லூஷன்’ (Retinal Vein Occlusion) எனப்படும் விழித்திரை நரம்பு அடைப்பு கண்டறியப்பட்டுள்ளது. இது விழித்திரையில் ஆபத்தான அடைப்பை ஏற்படுத்தும் ஒரு நிலை என்றுசுட்டிக்காட்டியுள்ளதாக சர்வதேச ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

23 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

21 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

45 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

41 0 0