உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

ஈரானில் நிலவும் கடும் நெருக்கடி மற்றும் அடக்குமுறை! மருத்துவமனைகளில் நடக்கும் கொடூரம்.!

உலக செய்திகள் 8 மாதங்கள் முன்
36 பார்வைகள்

ஈரானில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் அடக்குமுறைக்கு எதிராகத் தொடரும் போராட்டங்களில், பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நூற்றுக்கணக்கானோர் முறையான மருத்துவச் சிகிச்சையின்றி தவித்து வருகின்றனர்.

ஈரான் பாதுகாப்புப் படையினர் மருத்துவமனைகளில் புகுந்து காயமடைந்தவர்களின் மருத்துவக் குறிப்புகளைச் (Medical Records) சோதனையிடுவதாகவும், போராட்டக்காரர்களை அடையாளம் கண்டு அங்கேயே கைது செய்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இதனால், காயமடைந்தவர்கள் தங்கள் வீடுகளிலேயே மருத்துவர்கள் மற்றும் தாதியர்களின் உதவியுடன் ரகசியமாகச் சிகிச்சை பெற்று வருகின்றனர்.எங்களை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லாதீர்கள்; அங்கு சென்றால் எங்களைக் கைது செய்துவிடுவார்கள்” என்பதே பெரும்பாலான போராட்டக்காரர்களின் வேண்டுதலாக உள்ளது.

போராட்டக்காரர்கள் மீது சிறிய உலோகக் குண்டுகளைக் கொண்ட துப்பாக்கிச் சூடு நடத்தப்படுவதால், அவர்களின் உடலில் பல இடங்களில் குண்டுகள் பாய்ந்துள்ளன. அவற்றை வீட்டிலேயே அறுவை சிகிச்சை மூலம் அகற்றும் ஆபத்தான நிலையில் மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட மனித உரிமை அமைப்பான HRANA-வின் தகவல்படி, இதுவரை 6,301 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 11,000-க்கும் அதிகமான போராட்டக்காரர்கள் படுகாயமடைந்துள்ளனர்.டெஹ்ரானில் உள்ள ஒரு கண் மருத்துவமனையில் மட்டும் கடந்த சில நாட்களில் 700-க்கும் மேற்பட்டோருக்குக் கண்ணில் குண்டடி பட்டுத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.காயமடைந்த போராட்டக்காரர்களுக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களையும் ஈரான் அரசு குறிவைக்கத் தொடங்கியுள்ளது.

குறிப்பாக, குவாஸ்வின் (Qazvin) நகரைச் சேர்ந்த பிரபல அறுவை சிகிச்சை நிபுணர் அலிரேசா கோல்ச்சினி (Dr Alireza Golchini) போராட்டக்காரர்களுக்குச் சிகிச்சை அளித்ததற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார்.அவர் மீது “கடவுளுக்கு எதிரான பகை” (Moharebeh) என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது; இதற்கு ஈரானியச் சட்டப்படி மரண தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

23 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

21 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

45 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

41 0 0