உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

சட்டவிரோத குடியேறிகள் விவகாரம்: மினியாபோலிஸில் ஆதிக்கம் செலுத்தும் ட்ரம்ப்.!

உலக செய்திகள் 8 மாதங்கள் முன்
37 பார்வைகள்

அமெரிக்கா – மினியாபோலிஸ் நகரில் சட்டவிரோதக் குடியேறிகளுக்கு எதிரான அதிரடி நடவடிக்கைகள் மற்றும் துப்பாக்கிச் சூடு சம்பவங்களால் ஏற்பட்டுள்ள பதற்றத்தைத் தணிக்கவும் ஜனாதிபதி ட்ரம்ப்பின் ‘எல்லை சார்’ விவகார அதிகாரி டொம் ஹோமன் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த(24) சனிக்கிழமை மினியாபோலிஸில் அமெரிக்கக் குடிமகனான அலெக்ஸ் ப்ரெட்டி (37) என்பவர் எல்லைப் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.இதுபோன்று, அமெரிக்கக் குடிமகன் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில், உள்நாட்டுப் பாதுகாப்பு செயலர் கிறிஸ்டி நோம் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படைத் தலைவர் கிரிகோரி போவினோ ஆகியோர் நடந்து கொண்ட விதம் கடும் விமர்சனத்துக்குள்ளானது.

இதனைத் தொடர்ந்து, எல்லைப் பாதுகாப்புப் படைத் தலைவர் கிரிகோரி போவினோ மற்றும் அவரது குழுவினர், மினியாபோலிஸ் நகரிலிருந்து வெளியேறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மினியாபோலிஸில் குடியேற்றக் கைதி ஒருவருக்கு, நீதிமன்றம் உத்தரவிட்ட காலக்கெடுவுக்குள் பிணை விசாரணை நடத்தப்படாதமை குறித்து நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

இது குறித்து விளக்கம் அளிக்க, குடிவரவு மற்றும் சுங்க அமுலாக்கத் துறையின் (ICE) இடைக்கால பணிப்பாளர் டொட் லியான்ஸ், எதிர்வரும் வெள்ளிக்கிழமை நேரில் முன்னிலையாக வேண்டும் என்று ஃபெடரல் நீதிபதி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.இந்தச் சிக்கல்களுக்கு மத்தியில், ஜனாதிபதி ட்ரம்ப்பின் நம்பிக்கைக்குரிய அதிகாரியான டொம் ஹோமன், குடியேற்றக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை முன்னின்று நடத்தவும், உள்ளூர் அதிகாரிகளுடன் ஆலோசனை வழங்கவும் மினியாபோலிஸ் வந்துள்ளார்.இவரது வருகை அங்குள்ள புலம்பெயர்ந்தோர் மத்தியில் கூடுதல் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

23 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

21 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

45 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

41 0 0