உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

ஈரானுக்கு அருகே அமெரிக்காவின் படை குவிப்பால் பதற்றம் அதிகரிப்பு.!

உலக செய்திகள் 8 மாதங்கள் முன்
56 பார்வைகள்

ஈரானுடனான பதற்றத்திற்கு மத்தியில் அமெரிக்காவின் விமானந்தாங்கிக் கப்பலான யு.எஸ்.எஸ். அப்ரஹாம் லிங்கன் வளைகுடாவுக்கு விரைந்திருக்கும் நிலையில் அங்கு போர்ச் சூழல் அதிகரித்திருப்பதோடு அமெரிக்காவின் தாக்குதலுக்கு கடுமையான பதிலடி கொடுப்பது தொடர்பில் ஈரான் தொடர்ந்து எச்சரித்து வருகிறது.

மத்திய கிழக்கில் அமெரிக்கா கடந்த ஜூன் மாதத்திற்கு பின்னரே மீண்டும் தனது இராணுவத்தை பலப்படுத்த ஆரம்பித்துள்ளது. முன்னதாக அங்கு இராணுவம் பலப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்கா ஈரானின் மூன்று அணு நிலைகள் மீது தாக்குதல் நடத்தி இருந்தது. ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே 12 நாட்கள் நீடித்த மோதலுக்கு மத்தியிலேயே அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்தியமை குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் ஈரான் மீதான புதிய தாக்குதல் ஒன்று தொடர்பான அச்சம் அதிகரித்துள்ளது.

இந்த மாதத்தில் ஈரானில் இடம்பெற்ற அரச எதிர்ப்பு ஆர்ப்பட்டங்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆதரவு வெளியிட்டிருந்தார். அரச எதிர்ப்பாளர்களுக்கு அமெரிக்காவிடம் இருந்து ‘உதவி வந்த வண்ணம் இருப்பதாக’ அப்போது டிரம்ப் வாக்குறுதி அளித்திருந்தார். எனினும் கடந்த வாரம் ஈரான் தொடர்பான டிரம்பின் பேச்சில் தணிவு ஏற்பட்டிருந்தது.குறிப்பாக ஈரான் மீதான தாக்குதலுக்கு எதிராக சவூதி அரேபியா, கட்டார் மற்றும் ஓமான் நாடுகளின் அழுத்தம் டிரம்பின் முடிவில் மாற்றத்தை செய்திருப்பதாக நம்பகமான வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

எவ்வாறாயினும் ஈரானில் ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்துவது தொடர்பிலான திட்டத்தை டிரம்ப் நிர்வாகம் இன்னும் கைவிடவில்லை என்று அமெரிக்க முன்னாள் உளவு அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி ‘மிடில் ஈஸ்ட் ஐ’ செய்தித் தளம் குறிப்பிட்டுள்ளது.இந்நிலையிலேயே ஈரானை ஒட்டிய மெனா பிராந்தியத்தில் அமெரிக்க மேலதிக போர் விமானங்கள், வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் போர் கப்பல்களை அண்மைக் காலத்தில் குவித்து வருகிறது. இது தற்போது உச்ச கட்டத்தை எட்டி இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அப்ரஹாம் லிங்கன் விமான தங்கி கப்பல் தென் சீன கடலில் இருந்து மத்திய கிழக்கை நோக்கி சென்றிருப்பதாக அமெரிக்க மத்திய கட்டளையகம் கடந்த திங்கட்கிழமை (26) குறிப்பிட்டிருந்தது.ஈரானை நோக்கிச் செல்வதற்கு எம்மிடம் மிகப்பெரிய படை ஒன்று உள்ளது. எதுவும் நடக்காமல் இருக்கவே நான் விரும்புகிறேன்;. ஆனால் அவர்களை நாம் மிகக் கவனமாகக் கண்காணித்து வருகிறோம்’ என்றும் சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் இருந்து வொஷிங்டன் திரும்பிய டிரம்ப் கடந்த வியாழக்கிழமை குறிப்பிட்டிருந்தார். அப்ரஹாம் லிங்கன் விமானந்தாங்கி கப்பல், எஃப்–35 போர் விமானங்கள் மற்றும் எப்-ஏ–18 போர் விமானங்களை சுமந்திருப்பதோடு அது தவிர, அதில் ஏ.ஏ.-18ஜி கிரோலர் மின்னணு போர் விமானங்களும் உள்ளன.

இதில் ஏவுகணை எதிர்ப்பு அமைப்பும் உள்ளது.ஜோர்தானில் உள்ள முவஃப்பக் சல்டி விமானத் தளத்தில் எஃப்–35 போர் விமானங்களின் படைப் பிரிவு ஒன்றையும் அமெரிக்கா உருவாக்கி வருவதாக விமான போக்குவரத்து குறித்த கண்காணிப்பு தளம் ஒன்று குறிப்பிட்டுள்ளது. ஜோர்தானில் போர் விமானங்கள் நிறுத்தப்படுவதன் மூலம் ஈரான் மீது தாக்குதல் நடத்தவதற்கு எதிராக வளைகுடா நாடுகள் தனது வான் பகுதியை மூடினால் மாற்று வழியை ஏற்படுத்தவதாக இருக்கும் என்று அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கு அமெரிக்காவின் அரபு நட்பு நாடுகளின் தளங்கள் பயன்படுத்தப்பட்டால் அந்த நாடுகள் இலக்கு வைக்கப்படும் என்று ஈரானிய மூத்த அதிகாரி ஒருவர் எச்சரித்ததாக ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டிருந்தது.

ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல் ஒன்றுக்கு சவூதி, ஓமான், கட்டார் மற்றும் துருக்கி நாடுகள் எதிர்ப்பை வெளியிடும் பாணியில் அறிக்கைகளை வெளியிட்டுள்ளன.எனினும் அவ்வாறான தாக்குதல் ஒன்றுக்கு ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஜோர்தான் அமெரிக்காவுக்கு ஆதரவு அளிக்கும் என்று இஸ்ரேல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

23 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

21 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

45 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

41 0 0