உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

கனடாவுக்கு அமெரிக்கா விடுத்துள்ள மிரட்டல்.!

உலக செய்திகள் 8 மாதங்கள் முன்
36 பார்வைகள்

அமெரிக்கா மற்றும் கனடா இடையிலான பாதுகாப்பு தொடர்பான உறவுகளில் புதிய பதற்றம் உருவாகியுள்ளது.கனடாவுக்கான அமெரிக்க தூதுவர் பீட் ஹூக்ஸ்ட்ரா வெளியிட்ட கருத்தே இந்த பதற்றத்திற்கு காரணமாக அமைந்துள்ளது.அவர், “கனடா F-35 வகை போர் விமானங்களை வாங்க மறுத்தால், கனடாவின் வான்வெளியை பாதுகாப்பதற்காக அமெரிக்கா தனது போர் விமானங்களை இயக்க வேண்டிய நிலை உருவாகும்” என தெரிவித்திருந்தார்.


இந்தக் கருத்தைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கிடையிலான பாதுகாப்பு உறவுகள் குறித்து கனடாவில் பரவலான விவாதம் எழுந்துள்ளது.கனடா அரசு 2023 ஆம் ஆண்டு, 88 F-35 போர் விமானங்களை வாங்குவதற்காக 19 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தது.இந்த ஒப்பந்தத்தின் கீழ், 16 போர் விமானங்களுக்கு பணம் செலுத்தப்பட்டு, அவை 2026 ஆம் ஆண்டில் வழங்கப்படவிருந்தன.


எனினும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்த வரி அச்சுறுத்தல்களைத் தொடர்ந்து, இந்த ஒப்பந்தத்தை மீளாய்வு செய்ய கனடா தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் பின்னணியில், கனடா மாற்று வழியாக ஸ்வீடன் நாட்டின் Saab நிறுவனத்திடமிருந்து 72 Gripen E வகை போர் விமானங்களையும், 6 GlobalEye கண்காணிப்பு விமானங்களையும் வாங்கும் வாய்ப்பை ஆராய்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.இந்த நிலைமை, வட அமெரிக்க பாதுகாப்பு ஏற்பாடுகளில் புதிய அரசியல் மற்றும் இராணுவ மாற்றங்களை உருவாக்கக்கூடும் என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

23 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

21 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

45 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

41 0 0