கனடாவில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி.!
கனடாவின் வாகன் நகரில் இடம்பெற்ற இலக்குவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக யார்க் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம், வெஸ்டன் வீதி – ரௌன்ட்ரீ டெய்ரி வீதி சந்திப்புக்கு அண்மையான பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.
பல துப்பாக்கி குண்டுக் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்ட நபர், உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்தச் சம்பவம், வெஸ்டன் வீதி – ரௌன்ட்ரீ டெய்ரி வீதி சந்திப்புக்கு அண்மையான பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.
பல துப்பாக்கி குண்டுக் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்ட நபர், உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேற்கண்ட துப்பாக்கிச் சூடு சம்பவம், திட்டமிட்டு குறிப்பிட்ட நபரை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்டதாக உறுதியாகக் கூற முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும், இச்சம்பவத்தின் காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.இதனிடையே, கிப்லிங் வீதி – வுட்பிரிட்ஜ் அவென்யூ பகுதியில் வாகனம் ஒன்று தீப்பற்றியதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், மற்றொரு சம்பவம் தொடர்பாகவும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த இரண்டு சம்பவங்களுக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து பொலிஸார் ஆராய்ந்து வருகின்ற நிலையில், இதுவரை சந்தேகநபர் தொடர்பான விபரங்கள் வெளியிடப்படவில்லை.
எனினும், சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் வாகனம் கருப்பு நிற SUV வகையைச் சேர்ந்தது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.