உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

உக்ரேனின் பயணிகள் தொடருந்து மீது தாக்குதல்.!

உலக செய்திகள் 8 மாதங்கள் முன்
41 பார்வைகள்

பயணிகள் ரயில் மீது ரஷ்ய ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் குறைந்தது நான்கு பேர் உயிரிழந்ததாக கீவ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இந்த சம்பவத்தை உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி பயங்கரவாத செயல் என்று கண்டனம் செய்துள்ளார்.

செவ்வாயன்று உக்ரைனின் வடகிழக்கு கார்கிவ் பகுதியில் 200க்கும் மேற்பட்டவர்களுடன் சென்ற ரயில் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.முன்னதாக, உக்ரேனின் தெற்கு துறைமுகமான ஒடேசாவில், ஒரே இரவில் ரஷ்ய ட்ரோன் தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

எனினும், தாக்குதல் குறித்து ரஷ்யா எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. உக்ரேன் பல வருடங்களாக மிகக் கடுமையான குளிர்காலத்தை எதிர்கொண்டுள்ள நிலையில், அந்நாட்டின் எரிசக்தி மற்றும் போக்குவரத்து உள்கட்டமைப்பை குறிவைத்து மொஸ்கோ அண்மைய மாதங்களில் அதன் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது.

ரஷ்ய தாக்குதல்களுக்குப் பின்னர், உக்ரேன் முழுவதும் மில்லியன் கணக்கான மக்கள் வெப்பம், மின்சாரம் மற்றும் குடிநீர் இல்லாமல் தவிக்கின்றனர்.ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் 2022 பெப்ரவரியில் முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கினார், மேலும் மொஸ்கோ தற்போது உக்ரேன் பிரதேசத்தில் சுமார் 20% காட்டுப்பாட்டில் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

23 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

21 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

45 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

41 0 0