உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

கனேடிய நகரமொன்றில் நீச்சல் குளத்தில் விளையாடிக் கொண்டிருந்த பிள்ளைகள் மருத்துவமனையில் அனுமதி..!

உலக செய்திகள் 8 மாதங்கள் முன்
53 பார்வைகள்

கனடாவில் ஆல்பர்ட்டா மாகாணத்திலுள்ள நீச்சல் குளம் ஒன்றில் விளையாடிக்கொண்டிருந்த பிள்ளைகளுக்கு திடீரென உடல் நல பாதிப்பும் வாந்தியும் ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு உருவானது.ஞாயிற்றுக்கிழமை காலை, ஆல்பர்ட்டா மாகாணத்திலுள்ள Canmore என்னுமிடத்தில் அமைந்துள்ள நீச்சல் குளம் ஒன்றில் பெற்றோர் மேற்பார்வையில் பிள்ளைகள் பலர் விளையாடிக் கொண்டிருந்திருக்கிறார்கள்.சிறிது நேரத்தில் திடீரென பல பிள்ளைகளுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது, சிலர் வாந்தி எடுக்கத் துவங்கியுள்ளார்கள்.

பதற்றமடைந்த பெற்றோர் உடனடியாக அவசர உதவியை அழைத்துள்ளனர்.மருத்துவ உதவிக்குழுவினர் அங்கு விரைந்தபோது, 30 பிள்ளைகள் வரை பாதிக்கப்பட்டுள்ளதைக் கண்டுள்ளனர்.

அதைத் தொடர்ந்து, 11 பிள்ளைகள் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அவர்களில் 10 பேருடைய நிலைமை சீராக இருப்பதாகவும், ஒரு பிள்ளையின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

அந்த பகுதியில் தீயணைப்பு வீரர்கள் ஆய்வு மேற்கொண்டபோது, அங்கு ஒரு ரசாயனப்பொருளின் அளவு காற்றில் அதிகம் இருப்பதைக் கண்டறிந்துள்ளனர். அது குளோரினாக இருக்கலாம் என கருதப்படுகிறது.அந்த நீச்சல் குளத்தின் அருகே என்ன நடந்தது என்பதை அறிவதற்காக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

23 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

21 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

45 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

41 0 0