உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

சவூதி அரேபியாவில் மெட்ரோ ரயிலில் பிறந்த குழந்தை..!

உலக செய்திகள் 8 மாதங்கள் முன்
37 பார்வைகள்

சவூதி அரேபியாவில் மெட்ரோ ரயிலில் பயணம் செய்த ஒரு பெண்ணுக்கு எதிர்பாராத விதமாக மெட்ரோ நிலையத்திலேயே குழந்தை பிறந்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மெட்ரோ ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த அந்த பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. நிலைமையை உணர்ந்த மெட்ரோ ஊழியர்கள் மற்றும் பயணிகள், அவரை உடனடியாக ரயில் நடைமேடையில் அமர வைத்தனர்.

மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் முன் வலி அதிகரித்ததால், அங்கிருந்தவர்களின் உதவியுடன் அந்த பெண்ணுக்கு நடைமேடையிலேயே பிரசவம் பார்க்கப்பட்டது.அக்கம் பக்கத்தினர் மற்றும் மெட்ரோ பணியாளர்களின் துரித முயற்சியால் அந்த பெண்ணுக்கு அழகான குழந்தை பிறந்தது. பின்னர் தகவலறிந்து வந்த ஆம்புலன்ஸ் மூலம் தாயும் சேயும் பாதுகாப்பாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

தற்போது இருவரும் நலமுடன் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தற்செயலான நிகழ்வை கொண்டாடும் விதமாகவும், அந்த பெண்ணின் துணிச்சலை பாராட்டும் விதமாகவும், சவூதி மெட்ரோ நிர்வாகம் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அந்த பெண்ணும் அவரது குடும்பத்தினரும் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு சவூதி மெட்ரோ ரயிலில் முற்றிலும் இலவசமாக பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.அவசரமான ஒரு இக்கட்டான நேரத்தில் பிறந்த குழந்தையினால், அந்த முழு குடும்பத்திற்கும் இந்த ‘ஜாக்பாட்’ பரிசு கிடைத்துள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

23 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

21 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

45 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

41 0 0