உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

அணுவாயுத இரகசியம் கசிவு சீன ஜெனரல் பதவி நீக்கம்.!

உலக செய்திகள் 8 மாதங்கள் முன்
36 பார்வைகள்

அணுவாயுதம் தொடர்பான இரகசியங்களை அமெரிக்காவுக்கு கசிய விட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் சீனாவின் உயர்மட்ட இராணுவ தளபதியொருவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.சீன இராணுவத்தின் செயற்பாட்டுத் தலைவராக விளங்கும் 75 வயதான ஜெனரல் ஜாங் யூசியா இவ்வாறு பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் செய்தி வௌியிட்டுள்ளது.சீனாவின் அணுவாயுதத் தரவை வொஷிங்டனுக்கு வழங்கி கசிய விட்டதன் ஊடாக கடுமையான ஒழுக்க மீறலுக்கு அவர் உள்ளாகியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அத்தோடு சிரேஷ்ட அதிகாரியொருவரை பாதுகாப்பு அமைச்சராக பதவி உயர்த்தவும் அரசியல் குழுக்களை உருவாக்கவும் இலஞ்சம் பெற்றதாகவும் அவர் மீது மேலும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.இந்த விடயங்கள் குறித்து ஜெனரல் ஜாங் விசாரணையொன்றை எதிர்கொண்டுள்ளதாக பெய்ஜிங் தெரிவித்துள்ளது.

இதேவேளை பொதுமக்கள் மற்றும் இராணுவ அணுசக்தி திட்டங்களை மேற்பார்வையிடும் சீன தேசிய அணுசக்தி நிறுவனத்தின் முன்னாள் முகாமையாளர் கு ஜுன், ஜெனரலுக்கு எதிரான ஆதாரங்களை முன்வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.1979 இல் வியட்நாமுடனான சீனாவின் குறுகிய காலப் போரில் பங்குபற்றி நேரடி அனுபவம் பெற்ற சில தளபதிகளில் இவரும் ஒருவராகக் கருதப்படுகிறார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

23 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

21 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

45 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

41 0 0