உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

அமெரிக்காவில் பனிப்புயல் : இதுவரை 30 பேர் உயிரிழப்பு..!

உலக செய்திகள் 8 மாதங்கள் முன்
44 பார்வைகள்

அமெரிக்காவின் தென் மாகாணங்கள் முதல் வடகிழக்கு மாகாணங்கள் வரை நீண்டுள்ள பாரிய பனிப்புயல் காரணமாக இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.நியூயோர்க் நகரில் மட்டும் குளிரில் உறைந்து 08 பேர் உயிரிழந்துள்ளனர். மாசசூசெட்ஸ் மற்றும் ஓஹியோவில் பனி அகற்றும் வாகனங்கள் மோதி இருவர் உயிரிழந்துள்ளனர். டெக்சாஸ் மற்றும் ஆர்கன்சாஸில் பனிச்சறுக்கு விளையாட்டின் போது ஏற்பட்ட விபத்துகளில் இரு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.

கடும் பனிப்பொழிவு மற்றும் உறைபனி மழையால் மின் கம்பிகள் அறுந்து விழுந்ததில், மிசிசிப்பி மற்றும் டென்னசி உள்ளிட்ட மாநிலங்களில் சுமார் 5,60,000-க்கும் மேற்பட்ட வீடுகள் மின்சாரமின்றி இருளில் மூழ்கியுள்ளன.

பனிப்புயல் காரணமாக இதுவரை 12,000-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. வீதிகளில் பனி மலைபோல் குவிந்துள்ளதால் பல மாநிலங்களில் போக்குவரத்து முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டுள்ளது.

நியூயோர்க் போன்ற நகரங்களில் பாடசாலைகள் மூடப்பட்டு ஒன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. மிசிசிப்பி பல்கலைக்கழகம் இந்த வாரம் முழுவதும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.பல பகுதிகளில் வெப்பநிலை -31°C (மைனஸ் 31 டிகிரி செல்சியஸ்) வரை குறைந்துள்ளதால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

23 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

20 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

45 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

41 0 0