கிளிநொச்சியில் தொடருந்து மோதி வயோதிபர் உயிரிழப்பு.!
கிளிநொச்சியில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று நிகழ்ந்துள்ளது.கிளிநொச்சி காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட உதயநகர் பகுதியில், மிதிவண்டியில் பயணித்த வயோதிபர் ஒருவர் தொடருந்து கடவையைக் கடக்க முயன்றுள்ளார்.
அச்சமயத்தில், அனுராதபுரத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த தொடருந்து அவருடன் மோதியுள்ளது.இதனால், குறித்த வயோதிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர் ஆனந்தபுரத்தைச் சேர்ந்த 82 வயதுடைய சபாபதி என்பவரென அடையாளம் காணப்பட்டுள்ளார்.இந்த விபத்து தொடர்பில் கிளிநொச்சி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.