முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் வழக்கு விசாரணை அடுத்த மாதம்வரை ஒத்திவைப்பு..!
முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே மீது தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், சாட்சியங்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 16ஆம் திகதி நடத்த நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.இந்த வழக்கு இன்று கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கடவுச்சீட்டு பெறுவதற்காக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்திடம் தவறான தகவல்களை வழங்கியமை மற்றும் செல்லுபடியாகும் விசா இன்றி இலங்கையில் தங்கியிருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், குற்றப் புலனாய்வுத் துறை டயானா கமகே மீது வழக்கு பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.