உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

திருகோணமலையில் வயல் காவலுக்கு சென்றவருக்கு நேர்ந்த கதி.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
18 பார்வைகள்

திருகோணமலை- நாமல்வத்த பகுதியில் வயல் காவலுக்குச் சென்றவர் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.குறித்த விபத்து இன்று (26.01.2026) ஏற்பட்டுள்ளது.இவ்வாறு மீட்கப்பட்டவர், அதே பகுதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான 61 வயதுடைய எம். தாசுதீன் என்பவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று(25) இரவு அவருடைய வயலுக்கு காவலுக்குச் சென்றவர் இன்று 01 மணி வரைக்கும் வீட்டுக்கு வராத காரணத்தினால் அவரைத் தேடி பக்கத்து வீட்டிலுள்ளவர்கள் சென்றுள்ளனர்.இதன்போது, குறித்த நபர், வயலில் அமைக்கப்பட்டிருந்த கூடாரத்துக்கு உள்ளே குளிர் காரணமாக தீ மூட்டிய நெருப்புக்குள் தவறுதலாக விழுந்து எரிந்த நிலையில் கிடந்ததாக பொலிஸார் விசாரணையில் வாக்குமூலம் கொடுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து. மொரவெவ பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று குறித்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.இந்த மரணம் தொடர்பில் மொரவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கட்டணங்கள் மற்றும் புதிய விதிமுறைகள் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பு.!

கொழும்பிலுள்ள இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைமையகத்தில் புதுப்பிக்கத்தக்க மின்சார சக்திக்கான கட்டணங்கள் மற்றும் புதிய ஒழுங்குமுறைகள் தொடர்பில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்றையதினம் (24)…

49 0 0
இலங்கை செய்திகள்

யாழ். வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு.!

யாழ்ப்பாணம் – வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று காலை, பிரதேச சபையின் தலைமை அலுவலக வளாகத்தில்…

34 0 0
இலங்கை செய்திகள்

யாழில் தங்கச் சங்கிலியை உரிமையாளரிடம் ஒப்படைத்த பேருந்து சாரதியும், நடத்துனரும்.!

இ.போ.ச. பேருந்தில் பெண் பயணி ஒருவர் தொலைத்த 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்கச் சங்கிலியை மீட்ட நடத்துநரும் சாரதியும், உரியவரிடமே அந்த நகையை ஒப்படைத்துள்ளனர். இந்தச்…

54 0 0
இலங்கை செய்திகள்

தியவன்னா ஓயாவில் விழுந்த பெண் கடற்படையினரால் மீட்பு.!

பத்தரமுல்ல, ஜப்பான் நற்புறவு வீதியின் சதுன் உயன பகுதியில் இன்று (24) நண்பகல் தியவன்னா ஓயா ஆற்றில் விழுந்த 59 வயதுடைய பெண்ணொருவர் இலங்கை கடற்படையினரால் பாதுகாப்பாக…

61 0 0